ஹீரோ .. ஹீரோ ..
தனுஷ், சிம்புவுடன் ஜோடி சேர்ந்த சோனியா அகர்வால் இப்போது விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளார்.
காதல் கொண்டேனில் தனுஷுடன் அமர்க்களமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பின்,சக்சஸ் படத்தில் ஜூனியர் சிவாஜியுடன் நிடித்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார். பின்னர் சிம்புவுடன்கோவில் படத்தில் நடித்தார் சோனியா. படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட சோனியாவின் அழகும், நடிப்பும்அனைவராலும் பேசப்பட்டது.
இப்போது தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி, ரெயின்போ காலனி என்ற படத்தில் நடித்துவருகிறார். குட்டிப் பசங்களுடன் நடித்து வரும் சோனியா முதல் முறையாக கொஞ்சம் வயசான ஹீரோக்களுடன்அடுத்த ரவுண்டு வர தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக விஜய்யுடன் ஜோடி சேருகிறார்.
காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என கலவையாக கலக்க வருகிறார்கள் விஜய்யும், சோனியாவும். மதுர(மதுரை?) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் விஜய்யுடன் சோனியா தவிர ரக்ஷிதாவும் ஜோடியாகநடிக்கவுள்ளார். இவர் சிலம்பரசனுடன் நடித்தவர். இப்போது கன்னடம், தெலுங்கில் படு பிஸி.
சாக்லேட் பட தயாரிப்பாளர் மாதேஷின் இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. மாதேஷ் இயக்குநர் ஷங்கரிடம்இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.
கவர்ச்சிக்கு சின்னவீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா புகழ் தேஜாஸ்ரீ, காமெடிக்கு வடிவேலு என பக்காடீமுடன் களம் இறங்கும் மாதேஷ் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார்.
திருமலையில், புதுப்பேட்டை போல செட் போட்டு பரபரப்பு ஏற்படுத்தியது மாதிரி, இந்தப் படத்திலும் பெரும்செலவில் சென்னை சாலிகிராமம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி செலவில் மார்க்கெட் நகரம் போல்செட் போட்டுள்ளார்களாம்.
பரபரப்பாகப் பேசப்படும் அளவிற்கு படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும், அதிநவீன தொழில் நுட்பங்களும்பயன்படுத்தி இந்தியாவையே மிரட்டத் திட்டமிட்டுள்ளாராம் மாதேஷ்.
கில்லி படம் முடிந்த பின்னர் மதுர படப்பிடிப்பு ஆரம்பமாம்.


Click it and Unblock the Notifications











