கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா அவ்வளவுதான்.. முகமே போயிருக்கும்.. விஜய் மீது மோதிய ட்ரோன்
சென்னை: நடிகர் விஜய் இப்போது அரசியல் தலைவராகவும் களமாடிவருகிறார். சங்கீதா விவாகரத்து பிரச்னை, கரூர் துயர சம்பவம், ஜனநாயகன் பட லீக் என அத்தனையிலும் அவர் தேர்தலில் வென்றே தீருவது என்ற உறுதியில் இருக்கிறார். பரப்புரையின் கடைசி நாளான இன்றும் அவர் வெளியே வந்து மக்களை சந்தித்தார். அப்போது ட்ரோன் ஒன்று அவர் மீது மோதியது. நல்வாய்ப்பாக விஜய்யும், பவுன்சரும் முன்கூட்டியே தடுத்துவிட்டார்கள். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரண்டு தொகுதிகளில் களம் கண்டிருக்கிறார். ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற திட்டத்தில்தான் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். நிச்சயம் இரு தொகுதிகளிலும் தங்கள் தளபதியை வெற்றி பெற செய்வோம் என முனைப்போடு இருக்கிறார்கள் தொண்டர்கள். ஒரு வேட்பாளர் மட்டும் காணாமல் போயிருந்தார். உடனே எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு அறிவித்துவிட்டார் விஜய்.

பரப்புரையில் பிஸி: வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூரிலிருந்து தனது பரப்புரையை தொடங்கினார் அவர். அந்த சமயத்தில் ஒரு நாள் பரப்புரை என்றால் அடுத்ததாக குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது ஓய்வு எடுத்துவிடுவார். அவரது இந்த ஸ்டைலும் எல்லோரிடமும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. இப்படி ஒரு பரப்புரை முறையை உலகத்திலேயே யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் என்று ட்ரோலும் செய்ய தொடங்கிவிட்டார்கள். அத்தனைக்கும் தவெகவினர் தங்களால் முடிந்தளவு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
எஸ்.ஏ.சி விளக்கம்: அதேபோல் அவர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே விஜய் ஆறு மணிக்கு மேல் வெளியே வரமாட்டார். அவருக்கு இருக்கும் சில பழக்கங்கள்தான் அதற்கு காரணம் என்றும் பேசப்பட்டது. எப்படியாவது பேசி பேசியே அவரை ஆறு மணிக்கு மேல் வெளியே வர வைக்கலாம் என எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். ஆனால் விஜய்யோ துளிகூட அசையவில்லை. வழக்கமானது ஸ்டைலைத்தான் பின்பற்றினார். அதேசமயம் அவரது தந்தை புதிதாக ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
என்ன விளக்கம்?: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கரூர் சம்பவத்தால்தான் மாலை ஆறு மணிக்கு மேல் பரப்புரை செய்யாமல் இருக்கிறார். விஜய் இரவில் பரப்புரை செய்வதை விரும்புகிறார். ஆனால் கரூரை மனதில் கொண்டு தவிர்த்துவிடுகிறார். இருட்டில்தானே எல்லா தவறுகளும் நடக்கும். அதை அவர் புரிந்துகொண்டார். அரசியலில் அவர் பல சம்பவங்களை பார்த்துவிட்டார்" என குறீப்பிட்டார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மோதிய ட்ரோன்: இந்நிலையில் விஜய் இன்று இறுதிக்கட்ட பரப்புரையில் இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் முடிந்த அளவுக்கு சென்னையை கவர் செய்துகொண்டார். மக்களிடம் அவருக்கு வழக்கம்போல் வரவேற்பு கிடைத்தது. பரப்புரை வாகனத்தில் அவர் நின்றுகொண்டிருக்கையில் ட்ரோன் ஒன்று வேகமாக பறந்து வந்து மோதியது. விஜய்யும், அவருடன் இருந்த பவுன்சரும் முன்கூட்டியே கணித்து அந்த ட்ரோனை தட்டிவிட்டுவிட்டார்கள். நல்வாய்ப்பாக விஜய்க்கு எதுவும் ஆகவில்லை. விட்டிருந்தால் முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
