சங்கீதாவை வைத்து அவதூறு.. ஓபனாக பேசிய விஜய்.. ஜனநாயகன் முதல் இத்தனை சிக்கலா தளபதிக்கு?
நெல்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலுக்காக பரப்புரையை தீவிரப்படுத்தியிருக்கிறார். இன்று அவர் அதற்காக திருநெல்வேலிக்கு சென்றிருக்கிறார். அங்கு தொண்டர்கள் மற்றும் மத்தியில் பேசிய அவர்; கரூர் துயர சம்பவம், ஜனநாயகன் பட முடக்கம், சங்கீதா விவாகரத்து விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து ஓபனாக பேசினார். அது அங்கே கூடியிருந்தவர்களிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த முறை விஜய் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறார். அவர் மட்டும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூர் தொகுதியிலும் களம் காண்கிறார். ஒரு தொகுதி கைவிட்டாலும் இன்னொரு தொகுதி கை கொடுத்துவிடும் என்பது அவரது கணக்கு. அவர் எதிர்பார்த்தபடியே நடக்குமா இல்லை இரண்டு தொகுதிகளுமே விஜய்க்கு காலினை வாரிவிட்டு விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பரப்புரை ஸ்டார்ட்: இந்தத் தேர்தலில் எப்படியாவது தனது பலத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் காட்டிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். அவரது தொண்டர்களும் அதே மைண்ட் செட்டில்தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக பரப்புரையில் பரபரப்பாகியிருக்கிறார் விஜய். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடக்கவிருந்த பரப்புரை கூட்டத்தை தவெகவே தாமாக முன் வந்து கேன்சல் செய்தது. அப்போது அனைவருமே விஜய்யை கடுமையாக கிண்டல் செய்துவிட்டார்கள். விட்டால் இவர் வீடியோ காலில் பரப்புரை செய்வார் போல என்றும்; பரப்புரைக்கே லீவு விடும் ஒரே அரசியல் கட்சி தலைவர் இவர்தான் என்றும் விமர்சித்தார்கள்.
நெல்லை பயணம்: அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. அவர் இன்று திருநெல்வேலிக்கு சென்று தவெக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். வழக்கம்போல் அவர் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றபோது அவரது காரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர்கள் விபத்தில் சிக்கினார்கள். எத்தனை முறை கூறினாலும்; விஜய்யே தன்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என்று சொன்னாலும் தவெகவினர் கேட்பதாக இல்லை. இந்நிலையில் அந்த பரப்புரை கூட்டத்தில் விஜய்யின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் பேச்சு: அவர் பேசுகையில், "கரூர் விஷயத்தை ஊருக்கே தெரியும். ஆனால் விஜய் மீது பழியை போடு என்று சொல்லி செய்தார்கள். இவ்வளவு பெரிய பழியை விஜய் மீது போட்டாலும் மக்கள் கூடவே நிற்கிறார்கள் என அதிசயமாக பார்த்தார்கள். அதில் முயற்சி செய்து பார்த்தார்கள். சரியாக வரவில்லை. அதனையடுத்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். படத்தை முடக்கினால் நான் டிஸ்டர்ப் ஆவேன் என்று நினைத்தார்கள். யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் படத்தை முடக்கியதும் எடுபடவில்லை.
சங்கீதாவை வைத்து அவதூறு: சரி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். போடு SOP போடு என்று செயல்பட்டார்கள். எல்லோருக்கும் ஒரு ரூல் என்றால் விஜய்க்கு மட்டும் தனி ரூல்ஸ் போட்டார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை. அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்கள் என்னுடன் இருப்பவர்கள் (சங்கீதா) வைத்து அவதூறு பரப்ப செய்தார்கள். இத்தனை வருடங்களாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னாடி அவதூறு பரப்ப வைத்தார்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. திமுகவோ, பாஜகவோ மற்றும் பலராலோ யாராலும் எதுவும் செய்ய முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications















