twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்'... சர்கார் மேடையில் அரசியலில் மெர்சல் செய்த விஜய்!

    |

    Recommended Video

    முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்'... விஜய் அதிரடி வீடியோ

    சென்னை: சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி ரசிகர்களை நடிகர் விஜய் உற்சாகப்படுத்தினார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய நடிகர் விஜய், அரசியல் குறித்து வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்தார்.

    Vijay open political talk in sarkar audio launch

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    மெர்சல் திரைப்படத்தில் அரசியில் இருந்தது. ஆனால் சர்கார் திரைப்படத்தில் அரசியலில் மெர்சல் பண்ணியிருக்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

    நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே சாவித்திரி போல் நடித்து மிரைடியிருக்கிறார். அதேபோல இந்த படத்தில் வரலட்சுமி நடிப்பதாக சொன்னார்கள். வரலட்சுமியை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா.

    வெற்றிக்காக எவ்வளவு வேணும்னாலும் உழைக்கலாம். ஆனால் நாம் வெற்றியடைக்கக் கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் உழைக்கிறது.

    என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒரு பாலிசி தான். உசுப்பேத்துரவனுக்கு உம்முன்னும் கடுப்பேத்துரவனுக்கு கம்முன்னும் இருக்கனும். இது நிறைய நேரங்களில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

    எல்லோரும் தேர்தலை சந்திச்சுட்டு தான் சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாம் சார்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். நான் படத்தை தான் சொன்னேன். படத்துக்கு நீங்க ஓட்டு போடுங்க", என அவர் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் நடிகர் பிரசன்னா, சர்கார் படத்துல நீங்க முதலமைச்சரா நடிக்கிறா சொன்னாங்க... அது உண்மையா?... ஒரு வேளை நீங்க நிஜமாகவே முதல்வரான எப்படி நடந்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த விஜய், "நீங்க கற்பனையா தான கேட்குறீங்க. சர்கார் படத்துல நான் முதலமைச்சராக நடிக்கல. நிஜத்துல முதலமைச்சர் ஆனா நிச்சயம் நடிக்க மாட்டேன்.

    லஞ்சம், ஊழல் வைரஸ் மாதிரி இங்கு பரவியிருக்கு. அதை ஒழிக்கிறது கஷ்டம். ஆனாலும் அதை ஒழித்து தான் ஆக வேண்டும்.

    இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு மன்னர் தன்னுடைய பரிவாரங்களுடன் நகர்வலம் சென்றார். அப்போது அவருக்கு ஒரு சிப்பாய் எழுமிச்சை சாறு கொடுத்தார். அதில் உப்பு சற்று குறைவாக இருக்கவே அருகில் இருக்கும் கடையில் உப்பு வாங்கிவர சொன்னார் மன்னர்.

    ஆனால் அந்த சிப்பாய், சிறிதளவு உப்பு தானே. அதை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும். ஏதாவது ஒரு கடையில் இருந்து எடுத்து வந்துவிடலாமே எனக் கூறினார்.

    அதற்கு அந்த மன்னர், நான் இப்போது உப்பை எடுத்துவர சொன்னால், என் பின்னால் வரும் பரிவாரங்கள், மன்னரே உப்பை எடுத்து செல்கிறார் என நினைத்து ஊரையே காலி செய்துவிடுவார்கள்.

    எனவே, ஒரு தலைவன் சரியாக இருந்தால் பின்னால் வருபவர்களும் சரியாக இருப்பார்கள். ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் எல்லோரும் சரியாக இருப்பார்கள்.

    இங்கு பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லா இடத்திலும் ஊழல் நிறைத்திருக்கிது.

    காந்தி கையில் காங்கிரஸ் இருந்தவரை காங்கிரஸ் கட்சி நன்றாக இருந்தது. அதற்காக இப்போது இருக்கிறவர்களை நான் குறை சொல்லவில்லை.

    நாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். தர்மம், நியாயம் தான் ஜெயிக்கும். ஆனா லெட்டாக ஜெயிக்கும்.

    இயற்கையாக அடிப்பட்டி உதைப்பட்டு வருவான் பாருங்க அவன் கையில் ஒருநாள் சர்கார் நடக்கும். இதுதான் நியாமாக நடக்கும் " எனக் விஜய் கூறினார்.

    இதை கேட்டதும் அரங்கு அதிர கைத்தட்டல் ஒலி எழப்பின.

    English summary
    Actor Vijay spoke politics in sarkar audio launch function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X