ரஜினிக்கு முன்பே அஜித்துடன் வம்பு..நிலைமை கை மீறியதால் பீதியான தவெக பிரபலம்.. இதே வேலையா?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வருகின்றன. தனித்து களமிறங்கவிருக்கும் விஜய் ஆட்சியை பிடிப்பாரா இல்லை வாக்குகளை மட்டும் பிரிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து மனு வேறு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதேபோல் சுற்றி இருப்பவர்களையும் தவெகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்வதும் வாடிக்கையாகி இருக்கிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து விஜய்யும், அவரது கட்சியினரும் திமுகவை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். திமுகவை மட்டும்தான் அப்படி விமர்சிப்பார்கள் என்று பார்த்தால் தங்களை யார் எதிர்த்தாலும் அவர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள். முக்கியமாக விஜய் மீது அவ்வளவு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து; விவாகரத்து கேட்ட சங்கீதாவையே ரொம்பவே அவதூறாக பேசினார்கள். அதற்கு எல்லாம் விஜய் தனது மௌனத்தையே பதிலாக கொடுத்தார். வேறு வழியில்லாமல் ஒருகட்டத்துக்கு மேல் வாயை திறந்த அவர், 'அவ்வளவு வொர்த் இல்லை' என அலட்சியமாக வேறு பேசினார்.

ரஜினியுடன் சண்டை: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அரசியல் தளத்தை தாண்டி மற்ற தளங்களில் இருப்பவர்களையும் தேவையில்லாமல் பேசிவருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய ஆதவ், 'ரஜினிக்கு அரசியலுக்கு வந்து தலைவராக வேண்டுமென்று ஆசை. சிஸ்டத்தையே மாற்ற விரும்பினார். ஆனால் திமுக அப்போது அவரை மிரட்டியது. அதனை தாங்கிக்கொள்ளும் மன வலிமை அந்த சமயத்தில் அவரிடம் இல்லாமல் போய்விட்டது. விஜய் அப்படி இல்லை. எதுவாக இருந்தாலும் தாங்குவார்' என கூறினார்.
பதிலடி கொடுத்த ரசிகர்கள்: ஆதவ்வின் அந்தப் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. முக்கியமாக ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் ஆதவ்வின் பேச்சை கண்டித்து; ரஜினி கடந்த காலங்களில் செய்த சம்பவங்களை எல்லாம் பட்டியலிட்டார்கள். ரஜினியும் ஒரு அறிக்கையை வெளியிட்டு காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும் என எச்சரித்திருந்தார். நிலைமை கை மீறியதை தொடர்ந்து மேடையில் வைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா.
அஜித்தை வம்பிழுத்த ஃபெலிக்ஸ்: மன்னிப்பு கேட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிந்ததாக கருதப்பட்டாலும்; ரஜினியை அப்படி பேசியதற்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. தேவையில்லாமல் எல்லோரையும் வம்பிழுக்கிறார்கள் என்ற குரல்களும் தவெகவினரை நோக்கி உருவாகியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தவெகவின் செய்தி தொடர்பாளர் ஃபெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது, 'உச்சம் தொட்ட பல நடிகர்கள் வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இல்லையென்றால் கார் ரேஸுக்கு போகிறார்கள். ஆனால் நமது தலைவர் மக்களுக்காக வந்திருக்கிறார்' என்றார்.
பல்டி அடித்த ஃபெலிக்ஸ்: அவர் அப்படி பேசியதை அடுத்து அஜித் ரசிகர்களும் தவெகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள். மேலும் தேர்தலில் இருக்கு என்றும் எச்சரித்தார்கள். இந்நிலையில் அப்படி பேசிய ஃபெலிக்ஸ் இப்போது பல்டி அடித்திருக்கிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் ரேஸ் விட்டார் இல்லையா?.. அதைத்தான் அன்று நான் அந்த மேடையில் சொன்னேன். நான் ஏன் அஜித்தை பற்றி சொல்ல வேண்டும். ஆனால் எல்லோரும் அப்படித்தான் புரிந்துகொண்டார்கள்.ரஜினியை பற்றி அப்படி பேசியதற்கு ஆதவ் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications















