சங்கீதாவுடன் இருக்கும் ஃபோட்டோ.. ஏக்கத்துடன் வாங்கி பார்த்த விஜய்.. பரப்புரையில் நடந்தது தெரியுமா?
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் அடுத்த வாரம் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார் அவர். இந்நிலையில் கடைசியாக அவர் கன்னியாகுமரியில் பரப்புரை செய்தபோது நடந்த விஷயம் வைரலாகியிருக்கிறது.
விஜய்யும், சங்கீதாவும் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றார்கள். சங்கீதா தனது முழு சப்போர்ட்டை விஜய்க்கு வழங்கி; சினிமாவில் வளர்வதற்கு பக்கபலமாக இருந்தார். மேலும் பல படங்களில் விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றியிருக்கிறார். இப்படி நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னதாக மனஸ்தாபம் ஏற்பட்டு நாளடைவில் அது பெரிதாகிவிட்டது. ஒருகட்டத்தில் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார் சங்கீதா.

விவாகரத்து மனு தாக்கல்: அதனையடுத்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'விஜய் என்னை உணர்வு ரீதியாக பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருக்கிறார். அதை நான் கண்டித்தபோது என்னை வெளியே சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். பொருளாதாரத்தையும் முடக்கினார். நடிகையும், விஜய்யும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த நடிகை பொதுவெளியில் பகிர்ந்தார்.
குடும்பத்துக்கு அவமானம்: இதன் காரணமாக எனது குழந்தைகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் எனது கணவர் மூலம் எனக்கு நெருக்கடி ஏற்பட்டால் நடிகையின் பெயரையும் பொதுவெளியில் சொல்வேன். அவரை இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்' என்று குண்டை தூக்கி போட்டிருந்தார். அப்படி அவர் மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒரே கலர் ட்ரெஸ்ஸில் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். எனவே சங்கீதா குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாதான் என்று அடித்து சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆசைப்படும் ரசிகர்கள்: இந்த விஷயத்தில் முதலில் சங்கீதா மீது விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் வன்மத்தையும், அவதூறையும் பரப்பினார்கள். ஆனால் போகப்போக உண்மையை புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டார்கள். அதுமட்டுமின்றி திரிஷாவுடனான பழக்கம் வேண்டாம் அண்ணா; நீங்கள் சங்கீதா அண்ணியுடனேயே மீண்டும் சேர்ந்துவிடுங்கள் என கோரிக்கையும் வைத்தார்கள். இருப்பினும் விஜய் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்வது போல் தெரியவில்லை. 20ஆம் தேதி நடக்கும் விசாரணையில் அவரது மனநிலைமை என்னவென்று தெரிந்துவிடும். சூழல் இப்படி இருக்க பரப்புரையின்போது விஜய் செய்த செயல் ஒன்று வைரலாகியிருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் பரப்புரை செய்தார் விஜய். அப்போது அவரை பார்ப்பதற்காக வந்த ரசிகர்களில் ஒருவர், விஜயகாந்த்துடன் சங்கீதாவும், விஜய்யும் இருந்த ஃபோட்டோவை ஃப்ரேம் போட்டு கொண்டு வந்திருந்தார். அவ்வளவு கூட்டத்துக்கு நடுவிலும் சரியாக அதை அடையாளம் கண்ட விஜய்; வாங்கி சில நொடிகள் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு தன்னுடைய பவுன்சர்களிடம் கொடுத்து வேனில் பத்திரிமாக வைக்கும்படி கூறினார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், 'அண்ணனின் பார்வையே சொல்கிறது சங்கீதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை. கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்' என நம்பிக்கையோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















