இணையத்தில் லீக்கான தளபதி 66 படத்தின் கதை.. எரோடோமேனியா நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்கும் விஜய்?
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் கதை இதுதான் என ஒரு கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய். விஜய்யின் ரசிகர் பட்டாளத்தின் பலத்தை டிவிட்டர் ட்ரெண்டிங்கிலேயே தெரிந்து கொள்ளலாம்.

தெலுங்கு சினிமாவில் என்ட்ரி
விஜய் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் என்றால் போதும் டிவிட்டரை திணறடித்து விடுவார்கள் ரசிகர்கள். தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து மாஸ் பிஸ்னஸ் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.

தளபதி 66 படம்
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இதனை தொடர்ந்து தனது 66வது படமான தளபதி 66 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநரான வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

படக்குழு பிஸி
இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாகிறது. தளபதி 66 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியானது. மேலும் படக்குழு படத்திற்காக மற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் பிஸியாக உள்ளது. நடிகர் விஜய் சமீப காலமாக வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எரோடோமேனியா நோய்
இதனால் வெற்றி வாகையும் சூடி வருகிறார். இந்நிலையில் தளபதி 66 படத்திலும் நடிகர் விஜய் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் எரோடோமேனியா நோயால் பாதிக்கப்பட்ட மனிதராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.

காதலிக்காத போதே...
எரோடோமேனியா என்பது ஒரு அரிய மனநோயாகும். இந்த மன நோயால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை யாரோ தீவிரமாக காதலிக்கிறார் என்று நினைத்து கொள்வார்களாம். யாரும் தன்னை காதலிக்காத போதே அப்படி ஒரு எண்ணத்தில் உறுதியாக இருப்பார்களாம்.

ரொமான்ஸ்.. காமெடி.. சென்டிமென்ட்..
அந்த மாதிரியான நோய் பாதிக்கப்பட்ட நபராக தான் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது. 'தளபதி 66' திரைப்படம் ரொமான்ஸ், காமெடி மற்றும் சென்டிமென்ட் நிறைந்த ஒரு அருமையான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video

யார் ஜோடி?
இந்தப் படத்தின் மூலம் விஜய்யிடம் இருந்து ஒரு பழங்கால கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம். படத்தின் வெளியீட்டு விழாவைத் தவிர, தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார்? படத்திற்கு இசையமைப்பளார் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











