யுவன் பின்னிட்டார் ப்பா.. GOAT படம் பார்த்து விஜய் சொன்னது இதுவா?.. செம சம்பவம் இருக்கோ
சென்னை: வெங்கட் பிரபு கடைசியாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் படுஜோராக நடந்துவருகிறது. பல தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன. இந்தச் சூழலில் GOAT படம் பார்த்த பிறகு விஜய் கூறியதாக ஒரு விஷயம் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் 2 இடங்களில் இருப்பவர் விஜய். அவரது படங்கள் அசால்ட்டாக பெரும் வியாபாரம் செய்யக்கூடியவை. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கி சேதாரம் அடைந்தது என்பது தனிக்கதை. இதன் காரணமாக விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பை பெறும்படியான ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக இருக்கிறார்.

GOAT: சூழல் இப்படி இருக்க அந்தப் பொறுப்பை வெங்கட் பிரபுவிடம் கொடுத்திருக்கிறார் விஜய். லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக வெங்கட் பிரபுவுக்கும் அவரது கடைசி படமான கஸ்டடி காலை வாரியது. இதன் காரணமாக அவருக்கும் ஒரு கம்பேக் தேவைப்படுகிறது. எனவே இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க உழைத்திருக்கிறார்.
இன்னொரு மங்காத்தா?: முக்கியமாக அஜித்தை வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா படத்தை இயக்கியபோது அவர் கடுமையான ட்ரோல்களை சந்தித்தார். அதேபோல்தான் கோட் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள்கள் ஆகியவை வெளியானபோது வெங்கட்டை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதிலும் டீ ஏஜிங் லுக்கை பார்த்து உச்சக்கட்ட கொந்தளிப்படைந்தனர். ஆனால் மங்காத்தா படம் ரிலீஸாகி பெரும் சம்பவம் செய்தது போல் கோட் படமும் சம்பவம் செய்யும் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள்.
5000 ஸ்க்ரீன்கள்: படமானது நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. தமிழ்நாடெங்கும் பல தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சி ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. மேலும் டிக்கெட் புக்கிங்கிலேயே கோட் படம் பெரும் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒருதரப்பினர் கூறிவருகிறார்கள். உலகம் முழுவதும் மொத்தம் 5,000 ஸ்க்ரீன்களுக்கு மேல் GOAT திரையிடப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
விஜய் சொன்ன வார்த்தை: இதற்கிடையே படத்திலிருந்து வெளியான பாடல்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ட்ரெய்லரில் யுவனின் இசை பலரையும் கவர்ந்துவிட்டது. இந்நிலையில் GOAT படத்தை விஜய் பார்த்துவிட்டதாகவும் அவர் வெங்கட் பிரபுவிடம் ஒரு விஷயத்தை சொன்னதாகவும் தகவல் ஒன்று உலா வருகிறது. அதாவது படத்தை பார்த்த விஜய், 'படத்தில் யுவன் பின்னிட்டார் ப்பா' என்று ஒரே வார்த்தையில் சொன்னதாகவும்; அதன் காரணமாக படக்குழுவும், யுவனும் செம ஹேப்பியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் செம சம்பவம் செய்திருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











