கலக்குறீங்க ப்ரோ.. டிராகன் ஹீரோவை பாராட்டிய விஜய்.. பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். கடைசியாக அவர் நடித்த டிராகன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்தில் நடித்துவரும் அவர்; இன்னொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
கோமாளி படத்தின் டீசன்ட்டான வரவேற்புக்கு பிறகு சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நூறு கோடி ரூபாயை வசூலித்தும் செம சாதனையை படைத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. அங்கு சுமாரான வரவேற்பையே பெற்றது. இருப்பினும் லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ஃபேமஸாகிவிட்டார். அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள்.
டிராகன் பிரதீப் ரங்கநாதன்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் கடைசியாக டிராகன் திரைப்படத்தில் நடித்தார். அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மனசாட்சிபடி வாழ வேண்டும் என்பதையும், போலி டிகிரி சர்ட்டிஃபிகேட் குறித்தும் எந்தவித பிரசார நெடியும் படத்தை இயக்குநர் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப்பின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.
அடுத்த படங்கள்: மேலும் தனது சம்பளத்தையும் அவர் உயர்த்திவிட்டதாக தெரிகிறது. சூழல் இப்படி இருக்க தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு கீர்த்திவாசன் என்பவரது இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுகுறித்த க்ளிம்ப்ஸ் அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் டிராகன் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து நேற்று அந்தப் பட குழுவினரை சந்தித்தார் நடிகர் விஜய்.
பிரதீப் ட்வீட்: விஜய்யுடனான சந்திப்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'கலக்குறீங்க ப்ரோ என்று என்னிடம் சொன்னார். அவர் அப்படி சொன்னபோது எனக்கு என்ன மாதிரியான ஃபீலிங் வந்திருக்கும் என்பது குறித்து உங்களுக்கு தெரியும் என்று நான் அறிவேன். உங்கல் நேரத்துக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி சார். சச்சின் படத்தின் ரீ ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்' என்று எமோஷனலாக குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் நேற்றும் இயக்குநர் அஸ்வத்தும் எமோஷனலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











