ஜிகிர்தண்டா படத்துக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

By Shankar

ஜிகிர்தண்டா படம் சிறப்பாக உள்ளதாகக் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

பீட்சா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இரண்டாவது படம் இந்த ஜிகிர்தண்டா. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

இப்படத்தில் சித்தார்த் - லட்சுமிமேனன் நடித்துள்ளனர். நிஜ ஹீரோவாக பட்டையைக் கிளப்பியிருந்தார் சிம்ஹா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவை செய்திருந்தார்.

வரவேற்பு

வரவேற்பு

ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்து படம் பற்றிய நல்ல கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினரும் இப்படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

விஜய் பார்த்தார்

விஜய் பார்த்தார்

கத்தி படப்பிடிப்பில் இருந்த விஜய் இப்போதுதான் இப்படத்தைப் பார்த்தார். உடனடியாக இயக்குனர் கார்த்திக் சுபாராஜுக்கு தனிப்பட்ட முறையில் தன் பாராட்டை தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசித்ததாக கூறிய விஜய், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தை இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X