தமிழ்நாடு மட்டுமில்லை, கேரளாவிலும் விஜய்தான் டாப்: மலையாள நடிகர்களை நினைச்சா பாவமா இருக்கு
கொச்சி: நடிகர் விஜய் கேரளாவில் நம்பர் ஒன் நடிகர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில், அதிக ரசிகர்களை கொண்டுள்ளவர் விஜய். தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு முறை விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதும் தமிழகத்தைப் போலவே கேரளாவிலும், கொண்டாட்டமாக இருக்கும். இப்போது திரையரங்குகளில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சியிலும் விஜய் தான் முன்னிலையில் உள்ளார்.
மலையாளம் தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. திலீப் நடித்த டூ கண்ட்ரீஸ், பாகுபலி, புதிய முகம் ஆகிய படங்களைத் தாண்டி விஜய்யின் தெறி, மெர்சல் படங்களின் டிஆர்பி ரேட்டிங் தெறிக்கவிட்டுள்ளது.
மெர்சல் திரைப்படம் 8.59 புள்ளிகளும், தெறி திரைப்படம் 7.64 புள்ளிகளும் பெற்றுள்ளது. சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போதும் தமிழக கேரள விஜய் ரசிகர்களை ஒன்றிணைத்து பல உதவிகளை செய்தார் விஜய். இது போன்ற உதவிகளை செய்து வருவதால் கேரள ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ் ரசிகர்களின் மனதில் குடிகொண்டதைப் போல கேரள மக்களின் மனங்களிலும் விஜய் குடியேறிவிட்டார் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இப்போது விஜய்யின் நடிப்பில் சர்கார் திரைப்படம் தயாராகியுள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சர்கார் திரைப்படத்தை கேரளாவில் விநியோகிக்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











