'உசுப்பேத்துறவனுக்கு உம்முன்னும் கடுப்பேத்துறவனுக்கு கம்முன்னும்'... பஞ்ச் மேல் பஞ்ச் பேசிய விஜய்!

Recommended Video

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்'... விஜய் அதிரடி வீடியோ

சென்னை: சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பஞ்ச் மேல் பஞ்ச் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய நடிகர் விஜய், பல பஞ்ச் டயலாக்குகளை சரளமாக பேசி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

சர்கார் விழாவில் அவர் பேசிய பஞ்ச் டயலாக்குகள்.

உசுப்பேத்துறவனுக்கு உம்முன்னும்

உசுப்பேத்துறவனுக்கு உம்முன்னும்

என்னை பொறுத்த வரைக்கும் ஒரு பாலிசி தான். உசுப்பேத்துறவனுக்கு உம்முன்னும் கடுப்பேத்துறவனுக்கு கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இது நிறைய நேரங்களில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

சர்கார் அமைச்சிட்டு தேர்தல்...

சர்கார் அமைச்சிட்டு தேர்தல்...

எல்லோரும் தேர்தலை சந்திச்சுட்டு தான் சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாம் சார்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். நான் படத்தை தான் சொன்னேன். படத்துக்கு நீங்க ஓட்டு போடுங்க", என அவர் கூறினார்.

முதலமைச்சரானா நடிக்க மாட்டேன்

முதலமைச்சரானா நடிக்க மாட்டேன்

சர்கார் படத்துல நான் முதலமைச்சராக நடிக்கல. நிஜத்துல முதலமைச்சர் ஆனா நிச்சயம் நடிக்க மாட்டேன்.

தலைவன் சரியாக இருந்தால்...

தலைவன் சரியாக இருந்தால்...

ஒரு தலைவன் சரியாக இருந்தால் பின்னால் வருபவர்களும் சரியாக இருப்பார்கள். ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் எல்லோரும் சரியாக இருப்பார்கள்.

இப்படி நிறைய பஞ்ச் டயலாக்குகளை விஜய் அள்ளிவிட்டார். இதை கேட்டு அரங்கில் இருந்தர்களும் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். டி.வி. பார்த்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X