நீங்க என்ன ட்ரை பண்ணாலும் அழமாட்டேன்.. ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பல்பு கொடுத்த விஜய்.. டைமிங்ல அடிச்சிட்டாரு

சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. மலேசியாவில் நடந்த அந்த நிகழ்ச்சியை காண்பதற்கு அந்த நாட்டில் வாழும் விஜய் ரசிகர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்றார்கள். இதனால் எங்கும் தளபதி மயம்தான். இந்நிலையில் விழாவில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் விஜய் கொடுத்த பல்பு அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது.

அரசியல் கட்சி ஆரம்பித்து ஆளும் தரப்பை தொடர்ந்து அட்டாக் செய்துவருவதால்; இங்கு ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவது அவ்வளவு சரியாக இருக்காது என்று ஜனநாயகன் படக்குழு நினைத்திருக்கும்போல; அதன் காரணமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டத்தோ மாலிக் என்பவர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கூட்டம்: வெளிநாட்டில் நடப்பதன் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வருமா என்றெல்லாம் பலர் பேசினார்கள். ஆனால் எல்லா ஏரியாக்களிலும் ஐயா கில்லி என்பதை நிரூபிக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கலந்துகொண்டார்கள். ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அந்த ஸ்டேடியத்தில்; கிட்டத்தட்ட முக்கால்வாசி சீட்டுகள் நிரம்பிவிட்டன. மேலும் அந்த நாட்டில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட விழாவாகவும் இது மாறி; மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் தளபதி திருவிழா இடம்பிடித்துவிட்டது.

Vijay Reacts to Emotional Song No Matter How Much You Try I Won t Cry at Jana nayagan Event
Photo Credit:

எல்லோரும் எமோஷனல்தான்: இதுதான் விஜய்யின் கடைசி பட இசை வெளியீட்டு என்பதால் செலிபிரிட்டிகள் முதற்கொண்டு ரசிகர்கள்வரை அனைவருமே உணர்ச்சிவசப்பட்டுத்தான் காணப்பட்டார்கள். இசையமைப்பாளர் அனிருத் உருகிப்போய், 'நான் விஜய் அண்ணாவை மிஸ் செய்வேன். ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று நினைக்கும்போது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார். மேலும் அந்தப் பேச்சின் முடிவில் யார் பெற்ற மகனோ பாடலையும் பாடி அனைவரையும் கலங்க வைத்தார்.

அனைவரது பேச்சிலும் அதுதான்: அவர் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் திலீப்குமார் ஆகியோரது பேச்சிலும் அவர்கள் விஜய்யை எவ்வளவு மிஸ் செய்யப்போகிறார்கள் என்பதை உணர முடிந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நேற்று கண்ணீர் அலைகள் எழுந்துகொண்டிருந்தன. நிச்சயம விஜய்யும் இதை பார்த்து எமோஷன் ஆகியிருப்பார்தான். ஆனால் தனது உணர்ச்சிகளை பொதுவெளியில் காண்பிக்காத விஜய் நேற்றும் அப்படியே இருந்துகொண்டார்.

பல்பு கொடுத்த விஜய்: இருந்தாலும் நிச்சயம் சில கண்ணீர் துளிகளையாவது விடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அதுமட்டுமின்றி அவரை எமோஷனல் ஆக்குவதற்காக, அவர் மேடையில் ஏறியபோது, யார் பெற்ற மகனோ பாடலயும் ஒலிக்கவிட்டார்கள். அந்தப் பாடல் ஒலித்தபோது ரசிகர்களும் சேர்ந்து பாடினார்கள். ஆனால் சுதாரித்துக்கொண்ட விஜய்யோ, 'நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் நான் அழமாட்டேன்' என டைமிங்கில் அடித்துவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ, அண்ணன் விஜய் தெளிவுதான் ப்பா என்று கூறினார்கள்.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X