'தல' கூட நடிக்க விஜய் ரெடி: ஸ்ரிகிப்ட் இருக்காப்பா?
சென்னை: நடிகர் விஜய் நல்ல கதை அமைந்தால் அஜீத் குமாருடன் சேர்ந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் அஜீத் குமாரும், விஜயும் பெரிய நடிகர்கள். ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த அவர்களும் சரி, அவர்களின் ரசிகர்களும் சரி தற்போது ராசியாகிவிட்டார்கள். ஏதாவது விழாக்களில் அஜீத், விஜய் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளிவந்தால் அதைப் பார்த்து ரசிகர்கள் பூரித்துப் போவார்கள்.
புகைப்படத்திற்கே இவ்வளவு வரவேற்பு என்றால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள் என்றால் எப்படி இருக்கும். நினைத்துப் பார்க்கவே சூப்பராக இருக்கிறது அல்லவா. ஆனால் அவர்கள் இருவரும் என்ன சொல்வார்கள் என்று தானே நினைக்கிறீர்கள். இது குறித்து விஜய் பதில் கொடுத்துவிட்டார்.

அஜீத், விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே
1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜீத், விஜய் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவருமே வளர்ந்துவரும் நடிகர்களாக இருந்தனர்.

18 ஆண்டுகளாக சேராத 'தல', 'தளபதி'
ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அஜீத்தும், விஜயும் இன்றுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை.

அஜீத் கூட நடிக்க விஜய் ரெடி
இயக்குனர் விஜய் இளைய தளபதி விஜயிடம் நீங்கள் அஜீத் குமாருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜய், இயக்குனர்கள் மற்றும் அவர்களின் ஸ்கிரிப்ட்டைப் பொறுத்து தான் அவருடன் நடிக்க முடியும் என்றார். ஆக விஜய் ரெடி, அப்போ தல நீங்க?

யாராவது ஸ்கிரிப்ட் வச்சிருக்கீங்களா?
அஜீத், விஜய்க்கு சமமாக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்க யாராவது ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் இது தான் உங்களுக்கு நல்ல சான்ஸ்.


Click it and Unblock the Notifications