சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க விஜய் முடிவு?.. ஜோசியர் முன்னிலையில் நடந்து முடிந்த பஞ்சாயத்து?

சென்னை: விஜய்யும், சங்கீதாவும் 20 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்தார்கள். இரண்டு பிள்ளைகளையும் பெற்று கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். ஆனால் திடீரென கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இரண்டு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய விஷயங்களில் முதலில் இருப்பது விஜய் - சங்கீதா விவாகரத்து. இதற்கு முன்னர் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி உள்ளிட்டோருக்கு விவாகரத்து நடந்திருந்தாலும்; ஒரு தரப்பு இன்னொரு தரப்பு மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால், "சங்கீதாவோ தனது கணவர் விஜய்க்கும் இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்து தட்டி கேட்டதால் என்னை சுதந்திரமாக நடமாடவில்லை. பொருளாதாரத்திலும் முடக்கினார்" என பெரிய குண்டை தூக்கி போட்டார்.

Vijay Ready for Divorce New Twist in Sangeetha Sornalingam Case Before Hearing
Photo Credit:

விஜய்யின் செய்கை: இந்த குற்றச்சாட்டை நம்புவதா வேண்டாமா என்று பலரும் யோசித்த சூழலில்; யாருக்கும், எதற்கும் கவலைப்படாமல் திரிஷாவோடு மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஒரு திருமணத்துக்கு வந்தார். அதுமட்டுமின்றி ஒரு கூட்டத்தில் பேசுகையில், 'அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை' அலட்சியமாகவும் பேசினார். அவரது செய்கைகள் எல்லாம் அவருக்கு அரசியல் களத்தில் பின்னடைவை கொண்டு வந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சங்கீதாவின் மனநிலை: விஜய் ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் அண்ணன் அண்ணி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால் சங்கீதாவோ விஜய்யிடமிருந்து விலகுவது என்பதில் ரொம்ப்வே உறுதியாக இருக்கிறாராம். சமீபத்தில்கூட விஜய் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் அவர் எந்த ஆஃபரையும் ஏற்றுக்கொள்ளாமல் பிரிவுதான் சரி என்று கூறி அனுப்பியதாகவும் பனையூர் பட்சிகள் சொல்கின்றன. மீண்டும் சங்கீதாவுடன் சேர்ந்து இழந்த இமேஜை கொஞ்சமேனும் எழுப்பலாம் என்று யோசித்திருந்த விஜய்க்கு இது அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

Also Read
Vijay: மனைவி சங்கிதாவை எதிர்கொள்ளும் விஜய்.. பிரசாரத்திற்கு மத்தியில்.. அடுத்த கட்டத்தில் விவாகரத்து விவகாரம்
Vijay: மனைவி சங்கிதாவை எதிர்கொள்ளும் விஜய்.. பிரசாரத்திற்கு மத்தியில்.. அடுத்த கட்டத்தில் விவாகரத்து விவகாரம்

நாளை விசாரணை: இப்படி பல திருப்பங்களுக்கு மத்தியில் இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை விஜய் ஆஜராவாரா என்ற கேள்வியும் இருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க வழக்கு விசாரணையும், அந்த விசாரணையில் ஆஜரானால் விஜய் கூறப்போகும் விஷயங்கள் எல்லாம் அனைவரது கவனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க தொடங்கியுள்ளது.

என்ன தகவல்?: அதாவது விஜய் ஜோசியத்தின் மீது கொஞ்சம் அதிகமாகவே நம்பிக்கை வைத்திருப்பவராம். சங்கீதாவும், அவரும் சேர்ந்து இருந்தபோது அந்த ஜோசியர் குடும்ப நண்பர் என்கிற ரீதியில் நெருங்கியதாகவும் ஒரு பேச்சு அப்போதே இருந்தது. அவர் தற்போது மும்பையிலிருந்து இங்கே வந்து விஜய், சங்கீதா தரப்பிடம் பேசி பஞ்சாயத்து செய்ததாகவும்; அப்போது சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க தயார்; ஜீவனாம்சம் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும். இப்போதைக்கு 40 கோடி ரூபாய்வரை கொடுக்க ஓகே என கூறியதாகவும்; அதுமட்டுமின்றி மகனையும், மகளையும் என் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறேன் என விஜய் தரப்பு உறுதி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X