தளபதி 69ல் விஜய்க்கு 250 கோடி சம்பளம் இல்லையாம்.. பிக் பாஸ் அபிஷேக் ராஜா சொல்றதை கொஞ்சம் கேளுங்க!

சென்னை: 'கோட்' படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தளபதி 69 படத்துக்கு 250 கோடி சம்பளமாக விஜய் வாங்க போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் கடைசியாக நடிக்க உள்ள தளபதி 69 படத்துக்கு வாங்கப்போகும் சம்பளம் குறித்து பேசியுள்ளது விஜய் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

'ஜாம் ஜாம்' படத்தை இயக்கி வரும் அபிஷேக் ராஜா சினிமா விமர்சனங்களை யூடியூப் சேனலில் தொடர்ந்து பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர், விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார்.

Vijay Salary Abhishek Raja GOAT Thalapathy 69 Vijay birthday

சமீபத்தில் அவருக்கு சுவாதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் அபிஷேக் ராஜா.

கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய் பெற்றோர்: நடிகர் விஜய்யின் 50-ஆவது பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற பிரம்மாண்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற விஜய்யின் பெற்றோர்களான இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியும் பின்னணி பாடகியுமான ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டு சுமார் 50 கிலோ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

லேட் பண்ணும் வெங்கட் பிரபு: ஜூன் மாதம் முழுவதுமே தளபதியின் பிறந்தநாள் மாதமாக கொண்டாடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஃபயர் பிட் வந்த நிலையில், இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இன்னமும் கோட் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடாத நிலையில், தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவை டேக் செய்து விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

விஜய் சம்பளம் இவ்வளவா?: ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறிவிட்டார் என்றும் தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு அதிகபட்சமாக 275 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகமகா உருட்டு: ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இது உலகமகா உருட்டு டா சாமி என பிக் பாஸ் அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர். முன்னதாக விஜய் சம்பளம் 250 கோடி என சொல்லப்பட்டது. ஆனால் கூடுதலாக 25 கோடி ரூபாய் அதிகரித்து 275 கோடி விஜய் சம்பளமாக வாங்க போவதாக அபிஷேக் ராஜா கூறியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் அடம்?: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கும் படத்திற்கு விஜய் அதிக சம்பளம் கேட்டார் என்று தான் அவரை விலக்கி விட்டு அல்லு அர்ஜுன் பக்கம் சென்றார்கள் என்றும் ஆனால், அல்லு அர்ஜுன் தனது மார்க்கெட் உயர்ந்து விட்டது தனக்கு 280 கோடி சம்பளம் கொடுங்க என கேட்டதும் தற்போது அவரை நீக்கி விட்டு சல்மான் கான் பக்கம் அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் சென்று விட்டதாக கூறுகின்றனர். நடிகர்களுக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் கொடுத்து 100 கோடியில் சுமாரான படம் எடுப்பதை இந்திய சினிமா எப்போது மாற்றிக் கொள்ளுமோ? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X