தனது படங்களில் ரஜினியை நினைவூட்டும் விஜய்
சென்னை: இளைய தளபதி விஜயின் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நினைவூட்டும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ரஜினியை நினைவூட்டும்படி ஏதாவது ஒன்று இருக்கும். ரஜினி மாதிரி உடை அணிந்து வருவார், அல்லது அவரைப் போன்று ஏதாவது செய்வார். இல்லை என்றால் பாட்டில் ரஜினி பெயர் வரும்.
விஜய் ரஜினி பாணியில் காமெடி செய்வதாகக் கூட பலர் கூறுகின்றனர். இப்படி ரஜினியை நினைவூட்டும் விஜய் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ப்ரியமுடன்
கௌசல்யாவுடன் விஜய் ஜோடி சேர்ந்த படம் ப்ரியமுடன். இந்த படத்தில் வரும் ஒரு பாட்டில் இவன் பார்த்தா சின்ன ரஜினி தான் என்ற வரி வரும்.

புதிய கீதை
அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா என்று பாட்டிலேயே சூப்பர் ஸ்டாரை நினைவுபடுத்துவார்.

திருமலை
திருமலை படத்தில் சிங்குச்சா சிங்குச்சா என்று டிரஸ் போட்டு வரும் விஜயைப் பார்த்து ஜோதிகாவின் தோழி இது என்ன எங்கோ போஸ்டரில் பார்த்த மாதிரி இருக்கே என்பார். அதற்கு விஜய் நீங்க தலைவர் ரசிகையா இது தர்மதுரை ரஜினி கெட்டப் என்பார்.

மதுர
மதுர படத்தில் மப்பில் இருக்கும் விஜய் உழுந்த வடையைப் பார்த்து இது என்ன சிடி இவ்வளவு சிறியதா இருக்கு என்பார். அதற்கு ஒருவர் இது வடையப்பா என்பார். உடனே விஜய் என்ன படையப்பா சிடியா என்பார்.

திருப்பாச்சி
திருப்பாச்சி படத்தில் விஜய் வரும் முதல் காட்சியிலேயே அவர் அண்ணாமலை ரஜினி போன்ற கெட்டப்பில் வெள்ளை ஜிப்பா அணிந்து நெற்றி நிறைய பட்டை போட்டு வருவார்.

பெட்ரூமில் ரஜினிகாந்த் போட்டோ
விஜய் ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை தனது படுக்கையறையில் வைத்திருப்பதாக முன்பு ஒரு முறை தெரிவித்திருந்தார். ரஜினிக்கு தமிழகத்தில் இருக்கும் பல தீவிர ரசிகர்களில் விஜயும் ஒருவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.


Click it and Unblock the Notifications