பெப்சி ஊழியர்களுக்காக விஜய் எடுத்த முயற்சி...நெகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!
சென்னை : பெப்சி தொழியாளர்களுக்காக விஜய் எடுத்த முயற்சியால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சல் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே,விடிவி கணேஷ் , யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை வெற்று வருகிறது.
பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். 'தளபதி 66' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்க உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
தளபதி 66 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துமாறு நடிகர் விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜய்யின் இந்த முடிவால், சுமார் 100 முதல் 200 ஊழியர்கள் வரை பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், பெப்சி ஊழியர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











