விஜய்யின் முடிவு.. அந்தப் பக்கமே நாங்க போனது கிடையாது.. நண்பர் சஞ்சீவ்வின் மனைவி ஓபன் டாக்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதீத கவனத்தை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் விஜய். தவெகவை ஆரம்பித்து தனித்து போட்டியிடவிருக்கிறார். எத்தனை விழுக்காடு வாக்குகளை அவர் வாங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சியினரிடமும் எழுந்திருக்கிறது. அதேசமயம் சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனு, திரிஷாவுடன் அவர் ஜோடியாக வந்தது உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உருவாகியிருக்கிறது.

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவை எதிர்த்து பேசிவருகிறார். கொள்கை எதிரியான பாஜகவை அவர் சீண்டுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும்; அவர் அதை பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் அவரது மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.

Vijay Row Friend Sanjeev s Wife Preethi Sanjeev Breaks Silence Says We Never Sought Political Posts
Photo Credit:

நடிகையுடன் தொடர்பு: முக்கியமாக நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும்; அது தனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த உறவு எதற்காக என தட்டி கேட்ட பிறகு தனக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் விஜய் அளிக்கவில்லை. உறவை முறித்துக்கொள்வதாக கூறி தொடர்ந்து அந்த உறவில் இருந்தார் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அவர் அப்படி சொன்னதும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் விஜய்யின் இமேஜ் டேமேஜ் ஆக தொடங்கியது.

திரிஷாவுடன் வருகை: ஆனால் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தார். அவர் அப்படி வந்தது அவருக்கும், கட்சியின் மேல்மட்டத்துக்கும் சாதாரணமாக இருக்கலாம். அடிமட்ட அளவில் இருக்கும் தவெக தொண்டர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். ஒருகட்டத்தில் இதற்கும் சப்போர்ட் செய்தால் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் என்பதை உணர்ந்து; தங்கள் தலைவருக்கு எதிராகவே கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

Also Read
அப்பாவுடன் சண்டை.. காரை எடுத்துட்டு கிளம்பிய விஜய்.. அம்மாவின் சமாதானம்.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்
அப்பாவுடன் சண்டை.. காரை எடுத்துட்டு கிளம்பிய விஜய்.. அம்மாவின் சமாதானம்.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

விஜய் தரப்பின் அமைதி: இப்படி பலரும் விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்யோ இது வொர்த் இல்லை என்று அலட்சியமாக பேசிவிட்டார். அதேசமயம் விஜய்யுடன் இருப்பவர்கள் உதாரணமாக நண்பர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கிறது. அவர்களும் விஜய், திரிஷா போன்று சைலெண்ட் மோடில்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

ப்ரீத்தி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் முதலில் விஜய்யின் தீவிரமான ரசிகை. நான் பந்தம் என்ற சீரியல் செய்யும்போது போக்கிரி வந்தது. அப்போது அதே மாதிரி டபுள் ஷர்ட்டெல்லாம் போட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு நான் அவரது ரசிகை. நட்பு என்பது வேறு. கமல் சார் வந்த பிறகுதான் வாக்கு செலுத்துவதை தாண்டி அரசியலில் வேறு விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன். அதில் கொஞ்சம் அறிவு பெற வேண்டும் என தோன்றியது. இப்போது நம்கூட இருக்கும் நபர் விஜய்யை உங்கள் இடத்திலிருந்துதான் பார்க்கிறோம். நீங்கள் ஒரு சீட் கேட்பீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் அந்தப் பக்கமே போனது கிடையாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X