விஜய்யின் 48வது பிறந்தநாள்.. காமன் டிபியை வெளியிடும் 48 பிரபலங்கள்.. யார் யார்ன்னு தெரியுமா?

சென்னை : விஜய் தனது 48வது பிறந்தநாளை வரும 22ம் தேதி கொண்டாடவுள்ளார்.

அவரைக் காட்டிலும் ஆண்டுதோறும் அவரது ரசிகர்களே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கலக்கலான பல விஷயங்களை அவர்கள் செய்து வருகின்றனர்.

மாஸ் ஹீரோ விஜய்

மாஸ் ஹீரோ விஜய்

நடிகர் விஜய் மிகவும் மாஸ் ஹீரோவாக கோலிவுட்டில் காணப்படுகிறார். சிறு வயதிலிருந்தே இவர் நடித்து வருகிறார். இவரை அண்ணனாக, தோழனாக, இளைய தளபதியாக, தளபதியாக, தலைவனாக பல கோணங்களில் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

விஜய் பிறந்தநாள்

விஜய் பிறந்தநாள்

விஜய்யின் பிறந்தநாள் ஜூன் மாதம் 22 வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். கடந்த ஆண்டில் பீஸ்ட் படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. ஜூன் 21ம் தேதி மாலையில் இவை வெளியான நிலையில், நள்ளிரவில் மற்றொரு போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

அடுத்தடுத்த அறிவிப்புகள்

அடுத்தடுத்த அறிவிப்புகள்

இந்நிலையில் இந்த ஆண்டில் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தளபதி பிறந்தநாளைக்கு முன்தினம் மாலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதேபோல தளபதி 67 படத்தின் அறிவிப்பும் 22ம் தேதி வெளியாகும் என்று உறுதிப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் 66 படம்

விஜய் 66 படம்

தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் பேமிலி சென்டிமெண்ட் ஸ்டோரியில் நடித்து வருகிறார் விஜய். தோழா படத்தை கொடுத்த வம்சி, இந்தப் படத்தையும் அதே போன்ற மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது தளபதி 67 படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். அந்தப் படம் சிறப்பாக காணப்பட்ட நிலையில் தளபதி 67 படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய் பிறந்தநாள் காமன் டிபி

விஜய் பிறந்தநாள் காமன் டிபி

இந்நிலையில் இந்த இரு படங்களில் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக விஜய் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர். இந்த இரு கொண்டாட்டங்கள் போதாதென்று ரசிகர்களும் தங்களது பங்கிற்கு காமன் டிபி, மாஷ் அப் என பல்வேறு கொண்டாட்டங்களை இணையதளத்தில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட உள்ளனர்

பிரபலங்கள் வெளியிடும் காமன் டிபி

பிரபலங்கள் வெளியிடும் காமன் டிபி

விஜய்யின் 48வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 48 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட உள்ளனர். அதில் முதல்கட்டமாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, அஜய் ஞானமுத்து, ரத்னகுமார், ஏஎல் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் வெளியிட உள்ளன்.

48வது பிறந்தநாள் -48 பிரபலங்கள்

48வது பிறந்தநாள் -48 பிரபலங்கள்

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடிகர்கள் பிரேம்ஜி, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜூன் தாஸ், நடிகைகள் ஜனனி ஐயர், மஞ்சு வாரியர், வரலஷ்மி உள்ளிட்டவர்கள் இந்த டிபியை வெளியிட உள்ளனர். அடுத்ததாக நடிகர்கள் சாந்தனு, சஞ்சீவ், விக்ராந்த், மஹத், தீனா உள்ளிட்டவர்களும் இந்த டிபியை வெளியிடுகின்றனர்.

7 மணிக்கு வெளியீடு

7 மணிக்கு வெளியீடு

இவர்கள் அனைவரும் இன்று மாலை 7 மணிக்கு இந்த காமன் டிபியை ஒரே நேரத்தில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட உள்ளனர். இந்த டிபிக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இந்த காமன் டிபியை தங்களது வாட்ஸ்அப் உள்ளிட்ட பக்கங்களில் டிபிக்களாக விஜய் ரசிகர்கள் டிபிக்களாக வைத்துக் கொண்டு ட்ரெண்டாக்குவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X