வலிமையுடன் மோத முடியாமல் பின்தங்கிய பீஸ்ட்... விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் நேற்றைய தினம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரெயிலர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே இந்த ட்ரெயிலர் தந்துள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தற்போது காத்துள்ளனர். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல்கள்
விஜய்யின் படங்களில் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி எப்போதுமே மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும். அதை விஜய் ரசிகர்கள் சாதித்து காட்டுவார்கள். அதேபோல தான் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கோடிக்கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது. தொடர்ந்து ரசிகர்களில் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.

உற்சாகமான விஜய்
இந்தப் பாடல்களில் விஜய்யை உற்சாகமாக பார்க்க முடிகிறது. அரபிக்குத்து மற்றும் ஜாலிலோ ஜிம்கானா என்ற அந்தப் பாடல்கள் வழக்கத்திற்கு மாறான விஜய்யை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உற்சாகமான விஜய்யை பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெளியான 2 பாடல்கள்
படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தில் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

25 மில்லியன் வியூஸ்
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் தற்போது 25 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த ட்ரெயிலர் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கூர்க்கா படத்தின் சாயலில் படத்தின் காட்சிகள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வலிமையுடன் மோத முடியாத பீஸ்ட்
இந்த ட்ரெயிலர் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ள போதிலும் வலிமை படத்தின் சாதனையை எட்ட முடியாமல் பின்தங்கியுள்ளது. அஜித்தின் வலிமை ட்ரெயிலர் வெளியான 3 நிமிடங்களிலேயே 1 லட்சம் வியூஸ்களை பெற்றது. ஆனால் நேற்றைய தினம் வெளியான பீஸ்ட் ட்ரெயிலர் 1 லட்சம் வியூஸ்களை எட்ட 8 நிமிடங்கள் ஆனது.

விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்
விஜய்யின் பீஸ்ட் ட்ரெயிலர் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று அதன் ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்றதுடன் வலிமை படத்தின் ட்ரெயிலருடன் மோத முடியாமல் பின்தங்கியுள்ளது அதன் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











