இந்தப் படம் எந்தப் பிரச்சினையுமில்லாம வெளி வரணும்- இயக்குநருக்கு விஜய் சொன்ன அட்வைஸ்
தனது ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து படத்தை மீட்டு ரிலீஸ் பண்ணுவதற்குள் ஏற்படும் குழப்பங்களும் விஜய்யை இந்த முறை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கின்றன.
குறிப்பாக கதைத் திருட்டுப் புகார். இதற்கு முன் தனது வேறு எந்த படத்துக்கும் வராத புகார் கத்திக்கு வந்துவிட்டதால், அடுத்தடுத்த படக் கதைகளில் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளார்.

அடுத்து அவர் நடிப்பது சிம்பு தேவன் படத்தில். இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையானது. லார்டு ஆப் த ரிங்ஸ் படத்தைப் போல அதி உச்ச கற்பனையாக இந்தக்கதை புனையப்பட்டுள்ளதாம்.
கதையைக் கேட்டதுமே, இது எந்தப் படத்தின் பாதிப்பும் இல்லாத கதைதானே என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட விஜய், இந்தப் படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று இயக்குநர் சிம்பு தேவனிடம் கூறினாராம்.
இன்னமும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் தொடங்குகிறது. விஜய்யுடன் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், கிச்சா சுதீப் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











