அஜித் மகனுக்கு ஃபுட்பாலில் ஆர்வம்.. விஜய் மகளுக்கு எதில் ஆர்வம் தெரியுமா?.. அதில் அசத்துவாங்களாம் ப்பா
சென்னை: விஜய்யிடமிருந்து சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் அவரது மனைவி சங்கீதா. இந்த விஷயத்தில் மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் தாய்க்குதான் தங்களது முழு ஆதரவையும் கொடுத்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே விஜய்யுடன் அவரது மகனும், மகளும் பேசுவதில்லை எனவும்; அதனால்தான் வெளிநாட்டில் பட்டம் பெற்றபோதுகூட மகளை பார்க்க விஜய் செல்லவில்லை என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து கோரியிருக்கிறார் அவரது மனைவி சங்கீதா. தனது குற்றச்சாட்டில், 'விஜய் இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்' என சொன்னதுதான் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அப்படி சங்கீதா கூறிய சில நாட்களிலேயே அனைவராலும் சந்தேகிக்கப்படும் திரிஷாவுடன் ஒரே கலரில் உடை அணிந்துகொண்டு திருமணத்துக்கு விஜய் வந்தது; சங்கீதாவின் குற்றச்சாட்டுக்களை உறுதிபடுத்துவதாக அமைந்துவிட்டது.

சங்கீதாவின் முடிவு: திரிஷாவுடனான விஜய் வருகையை பார்த்த அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கோபமாகி பல கருத்துக்களை கூறினார்கள். அதுமட்டுமின்றி திரிஷாவுடனான பழக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து; மனைவியுடன் விஜய் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருக்கிறது. சமீபத்தில்கூட பரப்புரையின்போது சங்கீதாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் கொண்டு வந்ததை பார்த்து; அதை வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார். எனவே அவர் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சியில் இறங்குவார் என நம்புகிறார்கள் பலர். ஆனால் சங்கீதாவோ விஜய்யை பிரிவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
மகன், மகள் யார் பக்கம்?: விஜய் - சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் இந்த விஷயத்தில் தங்களது தாய்க்குத்தான் முழு சப்போர்ட்டையும் கொடுத்திருக்கிறார்களாம். அதிலும் மகன் உக்கிரமாக இருக்கிறார் என்றும்; விஜய் மீது இருக்கும் எக்கச்சக்கமான கோபத்தில்தான் தான் இயக்கும் சிக்மா படத்தில் தன்னுடைய பெயருக்கு முன்னால் வரும் இனிஷியலில்கூட தந்தை பெயரை பயன்படுத்தாமல் தாய் சங்கீதாவின் பெயரை பயன்படுத்தினாராம். மகள் திவ்யாவும் அதே மனநிலையில்தான் இருப்பதாக தெரிகிறது.
போகாத விஜய்: குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்பே மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்றார். ஆனால் அந்த பட்டமளிப்பு விழாவுக்குகூட ஒரு தந்தையாக விஜய் செல்லவில்லை. அந்த ஸ்தானத்தில் சகோதரர் ஜேசன் சஞ்சய்தான் சென்றிருந்தார். இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவுக்கு ஆர்வம் இருக்கும் விளையாட்டு பற்றி தெரியவந்திருக்கிறது. அதன்படி அவருக்கு பேட்மின்டன் விளையாடுவதில் அதீத ஆர்வம் இருக்கிறதாம். அதேபோல் தடகள போட்டிகளிலும் முத்திரை பதிக்கும் ஆசை இருக்கிறதாம்.
தீவிரமான பயிற்சி: பேட்மின்டனில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்பதற்காக கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம் அவர். கூடிய விரைவில் அவரை பேட்மின்டன் விளையாட்டில் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்கிறார்கள் அவர்களுடன் நெருங்கி பழகுபவர்கள். முன்னதாக, சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராவாரா?.. இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வந்து மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications















