ஏ வேண்டாம்... ஐ யில் முடியட்டும் டைட்டில்... விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்!
சினிமாவையும் செண்டிமெண்டையும் பிரிக்கவே முடியாது. விஜய்யும் செண்டிமெண்ட் பார்ப்பார். ஆனால் இந்த அளவுக்கு இதற்கு முன் பார்த்திருப்பாரா தெரியவில்லை.
அவரது ரசிகர்கள் 'இனி விஜய் டைட்டில் வைக்கும்போதே செண்டிமெண்ட் பார்க்க வேண்டும். அவருக்கு ஏ என்ற ஆங்கில எழுத்தில் முடியும் டைட்டில்கள் ராசியில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

'சுறா, ஜில்லா, தலைவா, பைரவா என்று ஆங்கில எழுத்து ஏ யில் முடியும் படங்கள் விஜய்க்கு சரியாக போவதில்லை. ஆனால் ஐ எழுத்தில் முடியும் காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி போன்றவை விஜய்க்கு ஹிட் படங்களாக அமைந்தன' என்றும் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள்.
ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இந்த வரிசையில் அவர்கள் புலி, ஆதி, குருவி ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். 'தலைப்பில் என்னய்யா இருக்கு... முதல்ல நல்ல ஸ்க்ரிப்டை செலக்ட் பண்ணச் சொல்லுங்க பாஸ்' என்கிறார்கள் விஜய்யின் நடுநிலை ரசிகர்கள்!


Click it and Unblock the Notifications











