ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. தளபதி கச்சேரிதான் போங்க.. படக்குழு போட்டிருக்கும் செம பிளான்?
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலைமையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 27அம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆடியோ லான்ச் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் வரவேற்பையும், எதிர்ப்பையும் சந்தித்துவரும் விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க; வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மமிதா பைஜூ உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
அடுத்த வருடம் ரிலீஸ்: இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று தற்போதைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கல் வீடியோவில் அவரது நடனத்தை பார்த்துகூட இனி இப்படி பார்க்கவே முடியாதா என்று எமோஷனல் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் பிரமாண்டமாக ரிலீஸாகிறது.

ரீமேக் படமா?: இப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று தொடர்ந்து கூறப்பட்டுவருகிறது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்துவருகிறது. அது ரீமேக்காக இருந்தலும் சரி, ரீமேக் படமாக இல்லாமல் ஒரிஜினல் படமாக இருந்தாலும் சரி; தளபதியின் கடைசி படம் இது என்பதால் எங்களுக்கு தேவையான கூஸ்பம்ப்ஸ் விஷயங்கள் தவறாமல் இடம்பெற வேண்டும், இப்படம் பெரிய மைல்கல்லாக இருக்க வேண்டும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் கோரிக்கை.
மலேசியாவில் இசை வெளியீட்டு விழா: இது ஒருபக்கம் இருக்க கட்சி ஆரம்பித்து தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை அட்டாக் செய்துவருகிறார் விஜய். எனவே இப்படத்துக்கு அக்கட்சி தரப்பிலிருந்து மறைமுகமாக அழுத்தம் தரலாம் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள். படத்துக்கு மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே அவர்கள் நெருக்கடி தரலாம் என்றும் கருதினார்கள். இப்படிப்பட்ட சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா இம்முறை தமிழ்நாட்டுக்கு பதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கும் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
புதிய தகவல்: இந்நிலையில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த விழா தொடங்கியதும், 'தளபதி கச்சேரி' என்ற பெயரில் அனிருத் உள்ளிட்டோர் எல்லாம் சேர்ந்து விஜய் பட பாடல்களை பாட திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த இசை வெளியீட்டு விழாவை விஜய்க்கான கான்செர்ட் போல நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆக விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.


Click it and Unblock the Notifications











