ஜனநாயகன் லீக்கிற்கு அவர்கள்தான் காரணமா?.. ரூமுக்குள் 6 பேர் மட்டும்தானாம்.. சீக்ரெட் சொல்லும் பிரபலம்

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் வெளியான ப்ரிண்ட் எடிட்டிங்கிற்கான ப்ரிண்ட் என்றும்; எனவே படக்குழு தரப்பிலிருந்துதான் கசிந்திருக்கும் எனவும் ஒரு பரபரப்பான தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விஷயம் குறித்து பேசுகையில் சில விஷயங்களை ஓபனாக பேசினார்.

தமிழ் திரைத்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது ஜனநாயகன் படம் லீக். இணையத்தில் நேற்று முதலில் ஐந்து நிமிட காட்சிகள் மட்டுமே வந்தன; சில மணி நேரத்திலேயே முழு படமும் லீக்காகிவிட்டது. இதற்கு முன்னர் அனைத்து படங்களுமே இணையத்தில் லீக்காகும்தான். ஆனால் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே; அதுவும் சென்சாரில் இருக்கும் ஒரு படம் லீக்காவது அரிதிலும் அரிதான ஒன்றுதான். அது விஜய்க்கு நடந்திருக்கிறது.

Vijay s Jana Nayagan Leak Bismi Highlights Edit Room Angle and Possible Source
Photo Credit:

யார் வெளியிட்டது?: இந்த விஷயத்தில் தலையாய கேள்வி என்னவென்றால் யார் இந்தப் படத்தை லீக் செய்திருப்பார் என்பதுதான். வெளியான ப்ரிண்ட்டில் Edi என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அது எடிட்டிங் காப்பி என்பதாகும். அந்தக் காப்பி ஹீரோ, இயக்குநர், எடிட்டர், தயாரிப்பாளர் ஆகிய நான்கு பேரிடம் மட்டுமே இருக்கும். எனவே இந்த நான்கு தரப்பில் ஏதோ ஒன்றிலிருந்துதான் படம் கசிந்திருக்க வேண்டும் என சிலர் பேசுகிறார்கள். அதுவும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஸ்மி பேச்சு: இந்நிலையில் படம் லீக்கானது பற்றி பேசிய பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, "படம் ரிலீஸுக்கு முன்னதாக இந்த கன்டென்ட் யார் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் பெயர் அதில் இருக்கும். உதாரணத்துக்கு தயாரிப்பாளரிடம் ஒரு ஃபுட்டேஜை காட்டும்போது அதில் Producer Copy என்று இருக்கும். இயக்குநருக்கு என்றால் இயக்குநர் காப்பி என்று இருக்கும். இதில் எடிட் என போட்டு ஒரு தேதியும் போடப்பட்டிருக்கிறது.

Also Read
ஜனநாயகன் நம்பர் 1.. விஜய் படம் இப்படி லீக் ஆகிடுச்சே?.. புலம்பும் திருப்பூர் சுப்ரமணியம்
ஜனநாயகன் நம்பர் 1.. விஜய் படம் இப்படி லீக் ஆகிடுச்சே?.. புலம்பும் திருப்பூர் சுப்ரமணியம்

தியேட்டரில் எடுக்கவில்லை: அதேபோல் இதை பார்க்கையில் தியேட்டரில் எடுத்தது மாதிரியும் தெரியவில்லை. எடிட் சூட்டிலிருந்துதான் இது போயிருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் பிரதீப். அவரிடம் இருக்கும் உதவியாளர்களில் இரண்டு பேர்தான் அந்த எடிட் ரூமுக்குள் அனுமதி உண்டு. அதேபோல் இயக்குநர் வினோத்தின் உதவி இயக்குநர்களிலும் இரண்டு பேருக்கு மட்டுமே அந்த ரூமுக்குள் அனுமதி. ஆகமொத்தம் இந்த ஆறு பேர் மட்டும்தான் அதை அக்சஸ் செய்ய முடியும். அங்கிருந்துதான் கசிந்திருக்கிறது என்றால் இந்த ஆறு பேரில் யாரோ ஒருவர் என்றுதானே அர்த்தம்.

அவர்கள் இல்லையாம்: ஆனால் விசாரிக்கையில் அவர்கள் மூலம் இது வெளியாகவில்லை. கூகுள் ட்ரைவை ஹேக் செய்திருப்பார்கள். அதன் மூலமாக லீக் செய்திருப்பார்கள் என சொல்கிறார்கள். கண்டுபிடிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. யார் லீக் செய்தானோ அவன்தான் குற்றவாளி. ஆனால் அவனுக்கும் மேலே ஒரு குற்றவாளி உண்டு. அது வேறு யாருமில்லை. சென்சார்தான். அவர்கள் மட்டும் உரிய நேரத்தில் சான்றிதழ் கொடுத்திருந்தால் இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்குமா" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X