ஜனநாயகன் லீக்.. தயாரிப்பாளர் நடு ரோட்டில்.. விஜய்தான் காரணம்.. பிஸ்மி டைரக்ட் அட்டாக்
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் லீக்கானதற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ஒன்று சேர்ந்து கண்டித்திருக்கிறது. ஆனால் விஜய்யோ இதுவரை அமைதியே காக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாககூட அவர் எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அமைதி அனைவரையும் காண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக விஜய்யின் ஆதரவாளர் என்று ஒருதரப்பினரால் சொல்லப்படும் பிஸ்மியேகூட கடுப்பாகி பேட்டிகொடுத்திருக்கிறார்.
விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னையால் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் ரிலீஸாகவில்லை. அதனையடுத்து வழக்கு போடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டு; மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்னமும் படம் பார்க்கவில்லை என்று தெரிகிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்து பெரிய பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அனைவரும் கண்டனம்: ஜனநாயகன் படம் லீக்கானதற்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழ் திரையுலக நடிகர்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.மேலும் இந்த செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது ஒரே கோரிக்கையாக இருந்தது.
ஆறு பேர் கைது: சூழல் இப்படி இருக்க இந்த விவகாரத்தில் மொத்தம் ஆறு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் டிஜிட்டல் ஆதாரங்களின் விசாரணை மற்றும் பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் க்ள்வுட் ஸ்டோரேஜ் தளங்கள் மூலம் பதிவேற்றுதல் மற்றும் டிரைவின் இணைப்புகளை பகிர்வதில் ஈடுபட்டதாக ஆறு பேரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஜனநாயகன் தொடர்பான டிஜிட்டல் சான்றுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
விஜய்யின் அமைதி: இந்த விஷயம் ஆரம்பித்ததிலிருந்தே விஜய் அமைதியாகவே இருக்கிறார். சமீபத்தில்கூட திருச்சி விமான நிலையத்தில் இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அவர் திரும்பிகூட பார்க்கவில்லை. மேலும், இந்தப் பிரச்னையில் மற்ற நடிகர்கள் எல்லாம் குரல் கொடுக்கிறார்கள்; சம்பந்தப்பட்ட விஜய் வாயே திறக்கவில்லையே எனவும்; கண்டித்தவர்களுக்கு நன்றியாவது சொல்லக்கூடாதா என்றும் ஓபனாகவே விமர்சனம் வைக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் விஜய்யின் ஆதரவாளர் என தொடர்ந்து ஒருதரப்பால் சொல்லப்படும் பத்திரிகையாளர் பிஸ்மியேகூட இவ்விவகாரத்தில் விஜய்யின் அமைதியை பார்த்து காண்டாகிவிட்டார்.
பிஸ்மி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை அவர் சென்சாரிடமே கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் அட்டகத்தியாகத்தான் இருக்கிறார். வங்கியை கொள்ளையடிப்பதற்கு சமமானது இது. இதற்காக எல்லா நடிகர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் விஜய்யோ வாயே திறக்கவில்லை. எனக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கிறார். அவர் வயிற்று வலிக்கு நாம் மாத்திரை சாப்பிட வேண்டுமா?.. விஜய்யை நம்பி 350 கோடி ரூபாய் பணம் போட்ட தயாரிப்பாளர் இன்று தெருவில் நிற்கிறார்.
அதற்கு காரணம் விஜய்தான். ஏனெனில் அவருக்கு பதில் வேறு யாராவது இந்தப் படத்தில் நடித்திருந்தால் சென்சாரில் இந்தப் பிரச்னை வந்திருக்காது. இந்தப் பிரச்னைக்கே விஜய்தான் காரணம். தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என குறைந்தபட்ச கோபம்கூட அவரிடம் இல்லை. குரல் கொடுத்தவர்களுக்கு நன்றிகூட சொல்லவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications















