இணையத்தில் லீக்கான ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம்தான்.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு?

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக படமானது ரிலீஸாகவில்லை. இந்நிலையில் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்தப் படத்தை தரமாக கொடுக்க நினைத்த அவர் ஹெச்.வினோத்தை இயக்குநராக டிக் அடித்தார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியிருந்தது.

Vijay s Jana Nayagan Leaked Online First 5 Minutes Video Goes Viral

படத்துக்கு முட்டுக்கட்டை: ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டதால் படம் ஜனவரியில் ரிலீஸாகவில்லை. எப்படியாவது அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்துவிட பட தயாரிப்பு நிறுவனம் முயன்று நீதிமன்றத்துக்கு சென்றது. ஆனால் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே வந்தது. இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று நொந்துகொண்டார்கள் தளபதி ரசிகர்களும், பட தயாரிப்பு நிறுவனத்தினரும்.

Also Read
மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்? தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? வீடியோவைப் பாருங்க
மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்? தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? வீடியோவைப் பாருங்க

மறு தணிக்கைக்கு படம்: இனிமேலும் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான விஷயங்கள் நடக்காது என்பதை புரிந்துகொண்டு வழக்கை வாபஸ் பெற்ற நிறுவனம; படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது. அதனை அதிகாரிகள் இழுத்தடித்து ஒருவழியாக சமீபத்தில்தான் பார்த்ததாக தகவல்கள் வந்தன. அதுமட்டுமின்றி மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு படமானது மே முதல் வாரத்துக்குள்ளேயே வெளியாகும் என நல்ல செய்தி சில நாட்களாக வர தொடங்கியது.

இணையத்தில் லீக்கான படம்: அதனால் ரசிகர்களும் நிம்மதியடைந்தார்கள். ஆனால் அவர்கள் நிம்மதியை குலைக்கும் விதமாக ஒரு விஷயம் நடந்துவிட்டது. அதாவது ஜனநாயகன் படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் இணையத்தில் லீக்காகியிருக்கின்றன. அதில் படத்தின் டைட்டில் கார்டிலிருந்து விஜய்யின் அறிமுக காட்சி வரை க்ளிப்பிங் இருக்கிறது. அந்தக் காட்சியில் விஜய்யின் கையில் TVK என்று பச்சை குத்தப்பட்டிருக்கிறது. படத்தில் அவரது கேரக்டர் பெயர் தளபதி வெற்றி கொண்டான். அதை குறிக்கும் வகையில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும்; விஜய்யின் கட்சி பெயரை யூஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே அதை க்ளோஸ் அப்பில் காட்டியிருக்கிறார்கள்.

திரையுலகம் ஷாக்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஜனநாயகன் லீக் ஆனதை பார்த்து திரைத்துறையே ஷாக்கில் உறைந்திருக்கிறது. மறு தணிக்கைக்கு சென்ற படம் எப்படி லீக்கானது? இந்தக் காரியத்தை செய்தவர்களை கண்டிப்பாக காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்கள். மறுபக்கம் தவெகவினரோ, விஜய்யை சுற்றி இப்படி பல பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றனவே என ஏகத்துக்கும் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகன் படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சி லீக்காகியிருக்கிறது. யாராவது அதை ரீ ஷேர் செய்திருந்தால் கைது செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X