ஜனநாயகன் வியாபாரம் இத்தனை கோடியா?.. ஆத்தாடி தலையே சுத்துதே.. கோலிவுட்டில் தளபதிதான் கிங்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படம்தான் கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்புகளை சந்தித்த படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் பற்றிய தகவல் வந்து தலையை சுற்ற வைத்திருக்கிறது.

அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. விஜய்யுடன் பூஜா ஜோடி சேரும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே நடித்த பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்தது போல் இதுவும் ஆகக்கூடாது என்பது அவரது விருப்பம்.

எப்படி இருக்கும் படம்?: இப்படம் அரசியல் ஜானரில் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் இல்லை என்பதை வினோத் உறுதிப்படுத்திவிட்டார். விஜய்யை அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். எனவே அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும்வகையில்தான் படம் உருவாக வேண்டும். அதுதான் நல்லதும்கூட. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களிலுமே அது மிஸ்ஸாகிவிட்டது என்பது கவனத்துக்குரிய ஒன்று.

Vijay s Jana Nayagan Makes Record 260 Crore Pre-Business Before Release
Photo Credit:

10 ஃபைட் சீன்களா?: முழுக்க முழுக்க இது அரசியல் ஜானரில் உருவாகாவிட்டாலும் படத்தில் கண்டிப்பாக அரசியல் வாடை இருக்கும் என்றே படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் இதில் மொத்தம் பத்து சண்டை காட்சிகள் இருப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்டு பத்து ஆக்‌ஷன் காட்சிகளா என்று வாயை பிளந்திருக்கிறார்கள் ரசிகர்களும், திரைத்துறையினரும்.

இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தளபதி கச்சேரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்பாடலை விஜய்யும், அனிருத்தும் சேர்ந்து பாடியிருப்பதாகவும், தெருக்குரல் அறிவு, அசல் கோளாறு ஆகியோர் எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. அனைவரது பார்வையும், காதுகளும் அந்தப் பாடலுக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டன.

படத்தின் வியாபாரம்: இந்நிலையில் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் குறித்து புதிய தகவல்கள் வந்திருக்கின்றன. அதன்படி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமத்தை வாங்கியிருக்கிறதாம். மேலும் சாட்டிலைட் உரிமையையும் பல கோடி ரூபாய் கொடுத்து சன் டிவி வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா திரையரங்க உரிமை 120 கோடி ரூபாய்வரையும், ஆடியோ உரிமை 35 கோடி ரூபாய்க்கும் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். ஆகமொத்தம் இதையெல்லாம் கணக்கு வைத்தால் படத்தின் ப்ரீ பிஸ்னெஸிலேயே கிட்டத்தட்ட 260 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்துவிட்டது. இப்படி பட ரிலீஸுக்கு முன்னதாகவே இவ்வளவு கோடியை வசூலித்து கோலிவுட்டில் தனக்கு இருக்கும் மாஸை விஜய் மீண்டும் உணர்த்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X