விஜய்யின் ஜனநாயகன் டிசம்பரில்தான் ரிலீஸா?.. அய்யய்யோ இது என்ன புதுசா இருக்கு?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஒன்பதாம் தேதியே ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததன் காரணமாக ரிலீஸாகவில்லை. இப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதன் காரணமாக விசாரணை எல்லாம் முடிந்து படம் எப்போது ரிலீஸாகுமோ என்ற உச்சக்கட்ட கவலையில் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்பதாம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு பிளான் செய்திருந்தது கேவிஎன் நிறுவனம்.

சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை: ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். சில நாட்கள் பொறுத்து பார்த்த தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தனி நீதிபதி ஆஷா படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டுக்கு சென்றது. அந்த மேல்முறையீட்டு விசாரணையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

Vijay s Jana nayagan to Release in December BookMyShow Update Shocks Fans
Photo Credit:

நீதிமன்றம் கொடுத்த உத்தரவு: இதற்கு எதிராக தயாரிப்பு தரப்பு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல; மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தது சுப்ரீம் கோர்ட். சில நாட்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமோ, 'மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன' என சொல்லி; மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தது. இப்படி நீதிமன்றத்திலும் ஜனநாயகன் பந்தாடப்படுவதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

எப்போதுதான் ரிலீஸ்: நீதிமன்றத்தின் புதிய உத்தரவால் மீண்டும் இந்த விவகாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது. இனிமேல் எப்போது தனி நீதிபதி விசாரணையை செய்து படம் எப்போது ரிலீஸாவது என மனம் தளர ஆரம்பித்துவிட்டார்கள் பலரும். அதேசமயம் பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக படம் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் புக் மை ஷோ தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம் மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

என்ன ஆனது?: அதாவது அந்த தளத்தில் ஜனநாயகன் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த ப்ளூ சட்டை மாறனோ தனது எக்ஸ் பக்கத்தில், "எதே Dec 2026ஆ! அந்த டைம்ல, தளபதி ஆட்சி 6 மாசமே முடிந்திருக்கும். அடேய் BookMyShow" என்று ட்வீட் செய்திருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் இது உண்மையாகவே நடந்துவிடுமோ என்றும் தங்களுக்குள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X