கத்தி பாட்டு சூப்பர்... சிலாகிக்கும் சிம்பு!
கத்தி படத்தின் பாடல்கள் சூப்பர்... பின்னி எடுத்துவிட்டார் அனிருத் என்று நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கத்தி படத்தின் பாடல்கள் நேற்று இரவு வெளியானது. அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத்.
பாடல்களைக் கேட்டுவிட்டு அனிருத்தை வெகுவாகப் பாராட்டிய சிம்பு, தன்னுடைய பாராட்டு வெளி உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ட்வீட் பண்ணி இருக்கிறார்.

கத்திக்கு பாராட்டு
கத்தி பாடல்கள் குறித்து, கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும், கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார் சிம்பு.

செல்ஃபி புள்ள சூப்பர்
மற்றொரு ட்வீட்டில் அனிருத்... உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா... எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு... குறிப்பா செஃல்பி புள்ள... சூப்பர்!. வாழ்த்துகள்! என்றும் வாசித்திருக்கிறார்.

தலைவா விஜய்
அனிருத்தை மட்டுமல்ல, கத்தி படத்தின் நாயகனான விஜய்யை குறிப்பிட்டு, தலைவா விஜய்... தல ஃபேன்தான்... ஆனா தலைக்கனம் இல்லாத ஃபேன்! என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார்.

அஜீத் – விஜய்
ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராகக் காட்டிக்கொண்ட சிம்பு, கடந்த சில வருடங்களாக தன்னை ஒரு அஜித் ரசிகர் என்று சொல்லி வருகிறார். அதை எந்த இடத்திலும் மறைக்காமல் வெளிப்படுத்தி வரும் சிம்பு, அவ்வப்போது தனக்கு விஜய்யும் நண்பர்தான் என்றும் சொல்லிவந்த சிம்பு தற்போது அதை உறுதி படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











