சுற்றிலும் சங்கீதா, திரிஷா பிரச்னை.. வேலையை ஆரம்பித்த விஜய்.. பக்கா ஸ்கெட்ச் போட்டிருக்காராம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; அடுத்த மாதம் நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடவிருக்கிறார். இவர் பெரம்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. அதற்கான வேலைகளை இப்போதிருந்தே தொடங்கிவிட்டாராம். பெரம்பூர் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. அங்கே விஜய் வென்றுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
தேர்தலை தனித்து சந்திப்போம் என்று முழங்கிய தவெக; திடீரென அதிமுக - பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கு செல்லவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எதையும் விஜய் செய்யவில்லை. மதசார்பற்ற கொள்கையில் எங்களுக்கு எப்போதுமே சமரசம் கிடையாது; எப்போதும் நாங்கள் மக்கள் பக்கம்தான் என்றெல்லாம் விளக்கிவிட்டார். இதன் காரணமாக திடீரென தோன்றிய அச்சம் தவெகவினரிடையே மறைந்துவிட்டது. கள நிலவரம் புரிந்துகொண்டு தளபதி செயல்பட்டிருக்கிறார் என்றெல்லாம் ஆறுதல் அடைந்தார்கள்.

சங்கீதா பிரச்னை: இந்தப் பிரச்னையை அவர் சரி செய்துவிட்டாலும்; சங்கீதாவின் பிரச்னையும், திரிஷாவின் பிரச்னையும் பெரிய விஷயமாக முன்னால் நிற்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆனால் ஏப்ரல் 20ஆம் தேதி விவாகரத்து தொடர்பான மனு விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திரிஷா விஷயத்திலும் விஜய்க்கு கொஞ்சம் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. எனவே இதையெல்லாம் தாண்டி விஜய் எப்படி அரசியலில் வெல்லப்போகிறார் என்பதை பார்க்க அனைவரிடமும் ஆவல் இருக்கிறது.
விஜய் போட்டியிடும் தொகுதி: இது ஒருபக்கம் இருக்க தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணலையும் பல கட்டங்களாக நடத்திவருகிறார் விஜய். தவெகவை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய தலைகள் எல்லாம் சென்னையில் களமிறங்கவிருக்கிறார்களாம். விஜய்யை பொறுத்தவரை பெரம்பூர் தொகுதி அவருக்கு விருப்பமானதாக மாறியிருக்கிறது. அங்கே இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் ஓட்டை தாண்டி; கட்சியின் கட்டமைப்பும் அங்கே பலமாக இருப்பதால் களமிறங்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் பனையூர் பட்சிகள் சொல்கின்றன.
திமுகவின் கோட்டை: அவர் பெரம்பூரில் நிற்பதை சிலர் மகிழ்ச்சியாக பார்த்தாலும் சிலர் சோகமாகவே பார்க்கிறார்கள். ஏற்கனவே பெரம்பூர் என்றாலே திமுகவின் கோட்டை என்ற நிலைமை இருக்கிறது. இப்படி ஹை ரிஸ்க்கான தொகுதியில் முதல் தேர்தலிலேயே போட்டியிட வேண்டுமா? திருச்சி பக்கம் நின்றால் உறுதியாக வெற்றி கிடைத்துவிடும் என புலம்பினாலும்; இத்தனை சவால்களை தாண்டி தங்கள் தலைவரை வெல்ல வைத்துவிட வேண்டும் என பெரம்பூர் தவெகவினர் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வேலையை ஆரம்பித்த விஜய்: அவர்கள் மட்டுமின்றி விஜய்யும் தன் பங்குக்கு களத்தில் குதித்திருக்கிறாராம். அதாவது பெரம்பூரில் உடனடியாக பல கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கப்போகிறாராம். வெளியூரை சேர்ந்த விஜய் எப்படி பெரம்பூருக்கு நல்லது செய்வார் என்ற பிம்பத்தையும், பேச்சையும் உடைத்து; என்னை பாருங்கள் நான் உங்களில் ஒருவன்; உங்களுடனேயே இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காகவும்தான் இந்த வீட்டை வாங்கும் முடிவுக்கு அவர் சென்றிருப்பதாகவும் அரசியல் தளத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தத் தகவலை ரமேஷ் பாலா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















