ஜனநாயகன் மேடையில் அரசியல் பேசிய விஜய்?.. தளபதி செம விவரம்.. தேர்தல் கூட்டணி பற்றி விளக்கிட்டாரா?

சென்னை: ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய். 'ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் செய்துவிட்டுத்தான் போவேன். அடுத்த 33 வருடங்களுக்கு அவர்களுடன் நிற்கப்போகிறேன்' என தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. தளபதி திருவிழா என்ற பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் விஜய் பட பாடல்களை பாடி பின்னணி பாடகர்களும், பாடகிகளும் அசத்தினார்கள். அதை கேட்கும்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நாஸ்டால்ஜியா மொமண்ட்டுக்கு சென்றார்கள். அதேபோல் பிரபுதேவா உள்ளிட்டோரும் விஜய்யின் பாடல்களுக்கு அட்டகாசமாக நடனம் ஆடினார்கள்.

விஜய்யும் நடனம்: பிரபுதேவா 'போக்கிரி பொங்கல்' பாடலுக்கு ஆடியபோது விஜய்யும் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து ஐக்கானிக் ஸ்டெப்பை போட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதுமட்டுமின்றி மேடையில் அவர் தளபதி கச்சேரி பாடலுக்கு சோலோவாகவும் நடனம் ஆடினார். அவற்றையெல்லாம் ஒன் லாஸ்ட் டைமாக கண்களில் நீர் வழிந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்.

Vijay s Powerful Speech at Jana nayagan Audio Launch Triggers Political Speculation
Photo Credit:

விஜய்யின் எமோஷனல் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய நாசர் உள்ளிட்டோர் எல்லாம்; விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். அதற்கு விஜய் வழக்கம்போல் தனது ட்ரேட் மார்க் சைலெண்ட்டை பதிலாக கொடுத்தார். அனைவரும் பேசி முடித்த பிறகு இறுதியாக பேசிய விஜய், "எனக்கு ஒன்று என்றால் தியேட்டர்களில் கடந்த 30 வருடங்களாக ரசிகர்கள் நின்றார்கள். அவர்களுக்காக இனி அடுத்த 33 வருடங்களுக்கு நிற்கப்போகிறேன்.

ரசிகர் கைது?: நான் நன்றி மட்டும் சொல்லிவிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுத்தான் போவேன்' என எமோஷனலாக பேசியிருந்தார். அவர் பேசியபோது ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்து அடங்கியது. இதற்கிடையே மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர், தவெக கொடியை அசைத்ததன் காரணமாக அவர் மைதானத்தில் வைத்தே அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோவும் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜய்யே சொன்னாரே?: நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கு அரசியல் தொடர்பான எந்த செயலையும் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து. அதுமட்டுமின்றி விஜய் நிகழ்ச்சிக்கு வந்தபோது பலரும் தவெக தவெக என்று கத்தினார்கள். அதை பார்த்த விஜய் இங்கே அதெல்லாம் வேண்டாம் என்று சைகை மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் பேசிய பேச்சை வைத்து புதிய கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வர தொடங்கியிருக்கின்றன.

என்ன ஆனது?: அதாவது மேடையில் பேசிய அவர், "விஜய் தனியாக வருவாரா அணியாக வருவாரா என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் எப்போ தனியாக வந்திருக்கிறோம். 33 வருடங்களாக மக்களோடுதான் இருக்கிறோம். அது மிகப்பெரிய அணிதானே. இப்போதுகூட அணியா தனியா என்று விளக்கமாக சொல்லவில்லையே என தோன்றும். சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால்தானே கிக் இருக்கும். இதை நான் மக்களுக்காக பேசுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தப் பேச்சை ஒருதரப்பினர், அவர் அணி என்று குறிப்பிட்டது தேர்தல் கூட்டணியைத்தான். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுமா இல்லை கூட்டணியோடு போட்டியிடுமா என்ற கேள்விக்கு; தாங்கள் கூட்டணியாக வரும் மைண்ட் செட்டில்தான் இருக்கிறோம் என்று மறைமுகமாக உணர்த்திவிட்டார். இனி தமிழ்நாட்டு அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறதோ என்று சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X