ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் தனது ரோல் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு மாலை அணிவித்து பூஜை செய்துள்ளார்.
புதிய மாலையுடன் நீலாங்கரை பகுதியில் இன்று காலை சுற்றித் திரிந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் அட்டகாச புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமா, அரசியல் என விஜய்க்கு தொடர்ந்து வெற்றிகளாக குவிந்து வரும் நிலையில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் அவர் இல்லத்தில் களைகட்டியுள்ளன.

பீஸ்ட் அப்டேட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வருகின்றன. ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், தளபதி விஜய்யின் பீஸ்ட் பட அப்டேட்டையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் வருமா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விஜய் மக்கள் இயக்கம் வெற்றி
நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சுயேட்சை உறுப்பினர்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 160க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட நிலையில், 77 பேர் வெற்றி பெற்றிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு பூஜை
ஆயுத பூஜை தினமான இன்று நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு பூஜை போடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதிய மாலையுடன் புத்தம் புதுசா நீலாங்கரையை சுற்றி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் வலம் வந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

கார் வழக்கு
நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் பீஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்தாத வழக்கு தொடர்பான தீர்ப்புகள் விஜய்க்கு எதிரான நெகட்டிவ் டிரெண்ட்டை சமூக வலைதளங்களில் உருவாக்கிய நிலையில், கெத்தாக ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு பூஜை போட்ட புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றன.

அடுத்த படம்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த படத்திற்கான பூஜை மிக விரைவிலே போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா இயக்குநரான வம்சி தளபதி 66 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மால் ஃபைட்
பெரிய ஷாப்பிங் மால் செட்டில் பீஸ்ட் படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அட்டகாசமான மால் ஃபைட் சீன் ஒன்றும் படமாக்கப்பட்டதாகவும் நடிகர் விஜய் வெறித்தனமான ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சனை கொண்டாடும் ரசிகர்கள்
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி உள்ள டாக்டர் படமும் வெளியாகி பலரது பாராட்டுக்களை அள்ளி திரையரங்குகளில் வசூல் மழையை குவித்து வருகிறது. இந்நிலையில், டாக்டர் படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் மொத்தமாக இயக்குநர் நெல்சனை கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இப்போதே ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











