twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான்!- விஜய்

    By Shankar
    |

    திருநெல்வேலி: பணம் கொடுத்து திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளி என்றார் நடிகர் விஜய்.

    பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, "கத்தி' திரைப்படத்தின் 50ஆவது நாள் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

    கத்தி படத்தைப் பொருத்தவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம், அவருடன் இணைந்து நானும் கடமையை மிகவும் சரியாகச் செய்ததால் படம் வெற்றியைத் தந்துள்ளது.

    Vijay's speech in Thirunelveli function

    கால்பந்து விளையாட்டில் ஒருவர் கோல் போட வேண்டுமானால், 10 பேரின் உழைப்பும் அவசியம். அதே நேரத்தில் மேலும் 11 பேர் கோல் போடவிடாமல் தடுப்பார்கள். அதையெல்லாம் தாண்டி சாதிப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எந்தச் செயலிலும் முயற்சியைவிட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக் கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும்.

    உலகில் நல்லவர்கள் துன்பப்பட்டாலும் அனுபவத்தைக் கற்றுத் தருவார்கள். ஆனால், கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து மறைந்தாலும் அவமானத்தைத் தாங்கிச் செல்வார்கள். அனுபவத்தைத் தருபவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

    குடும்பத்தைக் கவனிக்காமல் எனக்கு ரசிகராக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான். கத்தி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர்.

    ஏழை விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்கினார்.

    விழாவில் படத் தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆனந்த், விஜய் ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

    English summary
    Actor Vijay says that every fan who paid money to watch his movie are his master.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X