விஜய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்த 'எவர்கிரீன் மூவிஸ்'
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள படங்களில் பல படங்கள் என்றென்றும் நம் நினைவில் நிற்பவை.
நடிகர் விஜய் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் நம் நினைவில் நிற்கும் டாப் 6 சூப்பர் ஹிட் படங்களைப் பார்ப்போம்.

காதலுக்கு மரியாதை
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த விஜயும், ஷாலினியும் காதலித்து பெரிய போராட்டத்திற்கு பிறகு ஒன்று சேர்வது தான் கதை. கதை சிம்பிளாக இருந்தாலும் விஜய்-ஷாலினி ஜோடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

துள்ளாத மனமும் துள்ளும்
விஜய், சிம்ரன் ஜோடி சேர்ந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. படத்தில் பாடல்கள் மட்டும் சூப்பரல்ல, விஜயின் நடிப்பும் சூப்பர் என்று பேசப்பட்டது.

குஷி
ஜோதிகாவுடன் விஜய் நடித்த குஷி படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அந்த இடுப்பு காட்சியை கண்டிப்பாக மறந்திருக்க முடியாது.

கில்லி
த்ரிஷா, செல்லம் பிரகாஷ் ராஜுடன் விஜய் கலக்கிய படம் தான் கி்ல்லி. இந்த படத்திற்கு பிறகு விஜய்-த்ரிஷா ஜோடி ஹிட் ஜோடி என்றானது. விஜய் ஆக்ஷன் மட்டுமின்றி காமெடியிலும் அசத்தியிருப்பார். விஜயும், அவரது தங்கையாக நடித்த ஜெனிபரும் சேர்ந்த அடித்த கூத்து ரசிக்கும்படி இருந்தது.

போக்கிரி
பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின் நடித்த சூப்பர் ஹிட் படம் போக்கிரி. அதுவரை விஜய்க்கு ஏற்ற ஜோடி த்ரிஷா என்றவர்கள் எல்லாம் அட இளைய தளபதிக்கு அசின் பொருத்தமாக இருக்கிறாரே என்றனர்.

துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்த படம் துப்பாக்கி. முதன் முதலாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்திருந்தார். விஜயக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications











