விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல்.. காரணம் இதுதான்.. திரைத்துறையில் பூகம்பம்
சென்னை: விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது அவரை முதலமைச்சராக்கிட வேண்டுமென அவரது ரசிகர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். சங்கீதாவின் இந்த முடிவு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். அவரது ஒவ்வொரு படமும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதுண்டு. அதேபோல் சம்பளமும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை வாங்குவதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. எனவே அவர்தான் திரைத்துறையில் உச்சத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதப்பட்டுக்கொள்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என பலர் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மனைவியுடன் பிரச்னை: இது ஒருபக்கம் இருக்க அவருக்கும், மனைவி சங்கீதாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்தப் பிரச்னைக்கு விஜய்யின் நடவடிக்கைகள்தான் காரணம் என்றும் திரைத்துறையிலிருந்து முணுமுணுப்புகள் கேட்டன. ஆனால் விஜய் மீது அவதூறு பரப்புவதற்காக வேண்டுமென்றே இப்படி பேசுகிறார்கள் என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் பேசிவந்தார்கள். இந்த தகவல் குறித்து விஜய்யோ, சங்கீதாவோ எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தார்கள்.
லண்டனில் சங்கீதா: அதுமட்டுமின்றி சங்கீதா இப்போது விஜய்யுடன் இல்லை. அவர் தனது மகள் மற்றும் மகனுடன் லண்டனில் இருக்கும் தனது தந்தை வீட்டில் வசிக்கிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், ஜேசன் சஞ்சய் படம் இயக்கும் வாய்ப்பையே சங்கீதாவும், அவரது தந்தையும்தான் லைகாவிடம் பேசி வாங்கிக்கொடுத்தார்கள் எனவும் பரபரப்பாக பேசப்பட்டது. மனைவியுடன் தனக்கு இருக்கும் சண்டையினால்தான் ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார் என அறிவிப்பு வந்தபோது விஜய் ஒரு வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை என்றும் கருதப்பட்டது. மேலும், விஜய்யுடன் அவரது மகன் ஜேசன் பேச்சுவார்த்தையையே நிறுத்திவிட்டார் என்றும் தொடர்ந்து கூறப்பட்டுவந்தது. இப்படி விஜய்யின் பெர்சனல் வாழ்க்கை குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்தாலும் அதை விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் திட்டவட்டமாக மறுத்துவந்தார்கள். இதற்கெல்லாம் காலம் தகுந்த பதிலடி கொடுக்கும் என உறுதியாக நம்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து மனு தாக்கல்: இந்நிலையில் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், 'கடந்த இரண்டு வருடங்களாக விஜய்யை பிரிந்து வாழ்கிறேன். எனவே விவாகரத்து வேண்டும். விஜய் திருமணத்தில் மீறிய உறவில் இருந்தார். அதனை தட்டிக்கேட்டதால் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். மேலும் செலவுக்குகூட பணம் தரவில்லை.
எந்த மாற்றமும் இல்லை: கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் மனதளவில் என்னை பிரிந்து வாழ்ந்தார்.நடிகையுடன் அவர் உறவில் இருந்ததால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக உறுதி கொடுத்தார். ஆனால் அவரது நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே பரஸ்பர விவாகரத்துக்கு முயன்றோம். அவர் மறுத்துவந்தார் ' என குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவானது ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது திரைத்துறையில் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















