விஜய்க்கு நிம்மதி.. சங்கீதா விவாகரத்து வழக்கு என்ன ஆச்சு தெரியுமா?.. இதை படிங்க முதல்ல!
சென்னை: விஜய் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சங்கீதா விவாகரத்து கோரியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக விஜய் இன்று ஆஜராவாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. சூழல் இப்படி இருக்க விஜய்யும், சங்கீதாவும் இந்த விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜரானார்கள். மேலும் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார். மேலும் விஜய்க்கு பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் வேலை பார்த்தார். கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் ஜோடியாக வலம் வந்த அவர்களுக்குள் திடீரென சில வருடங்களாக பிரச்னை ஓடியிருக்கிறது. அதை வெளியே தெரியாதபடி முடிந்த அளவு பார்த்துக்கொண்டார்கள். ஆனால் நிலைமை கையை மீறி போனதால் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார் சங்கீதா.

சரமாரியான குற்றச்சாட்டுக்கள்: தனக்கு விவாகரத்து வேண்டும் என்பதோடு மட்டும் முடித்திருந்தால் பரவாயில்லை; அவரோ, 'விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார், அவர் என்னை சுதந்திரமாக நடமாடவில்லை, பொருளாதார ரீதியாக முடக்கினார், நடிகையும், அவரும் பல முறை வெளிநாடுகளுக்கு ஒன்றாக சென்று வந்திருக்கிறார்கள், அந்தப் புகைப்படங்களை நடிகையே பொதுவெளிகளில் பகிரவும் செய்திருக்கிறார்' என பல குற்றச்சாட்டுக்களை மலை போல் அடுக்கி வைத்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய்க்கு பின்னடைவு: போதாக்குறைக்கு திரிஷாவுடன் வேறு ஒன்றாக வந்துவிட்டார் விஜய். அதுவும் பெரிய பேசுபொருளானது. இப்படி பல விஷயங்கள் விஜய்யை சுற்றி நடந்துவிட்டன. அதுவும் அவர் அரசியலுக்கு வந்திருக்கும் நேரம் பார்த்து சங்கீதா இப்படி செய்தது தளபதி ரசிகர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி சங்கீதாவை அவர்கள் தரக்குறைவாகவும் பேசினார்கள். இவை எல்லாம் சேர்ந்து அவருக்கு தேர்தல் களத்தில் கொஞ்சம் பின்னடைவை தந்திருக்கிறது என்பது உண்மைதான். இது தேர்தல் ரிசல்ட்டில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும்.
சங்கீதாவின் முடிவு: இந்த விஷயத்தில் சங்கீதா ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறாராம். தனக்கு விஜய் ஏற்படுத்திய மன உளைச்சலால்தான் அவர் இப்படி ஒரு முடிவில் உறுதியாக இருக்கிறார் என்றும்; எந்த சமாதான பேச்சுவார்த்தையும் வேலைக்கு ஆகாது; அவர் நினைத்த ஜீவனாம்ச தொகையை விஜய்யிடமிருந்து பெற்றே தீருவார் என்றும் ஒருதரப்பினர் தொடர்ந்த் கூறிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க இன்று வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் ஆஜராவாரா இல்லை என்ற கேள்வியும் இருந்தது.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: இந்நிலையில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தின விசாரணைக்கு விஜய் காணொலியில் ஆஜராக அனுமதியளிக்குமாறு அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு இருக்கும் சூழலில்; இன்று விசாரணையில் என்ன நடக்குமோ என்று அச்சத்தில் இருந்தார்கள் ரசிகர்கள். இப்போது வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் உச்சக்கட்ட நிம்மதியடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
