விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை.. ஆஜராகிறாரா விஜய்?.. என்ன சொல்லப்போகிறார்?
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனையடுத்து பல திருப்பங்களுடன் இந்த விஷயம் சென்றது. விஜய் அசால்ட்டாகவே இதை டீல் செய்வதாகவே அவரது செயல்பாடுகள் உணர்த்துகின்றன. சூழல் இப்படி இருக்க அந்த மனுவானது இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இன்றைய தினம் விஜய் ஆஜராவாரா? அப்படி ஆஜரானால் அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது.
விஜய் இன்னொரு நடிகையும் திருமணத்தை மீறிய தொடர்பில் இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாகவே உணர்வு ரீதியாக அவர் என்னை பிரிந்துதான் வாழ்கிறார். எனவே அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். நடிகை விஷயத்தில் கணவர் தரப்பிலிருந்து நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரை சொல்வேன். அவரை இரண்டாவது எதிர் மனுதாரராகவும் சேர்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கள் கோலிவுட்டில் பெரிய புயலை கிளப்பியது. போதாக்குறைக்கு விஜய் இப்போது அரசியல் களத்திலும் இருக்கிறார். எனவே அங்கும் இந்த விஷயம் எதிரொலித்தது.

விஜய்யின் மூவ்: சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே அனைவராலும் சந்தேகிக்கப்பட்ட நடிகை திரிஷாவுடன் திருமணத்துக்கு வந்திருந்தார். அது பெரிய கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சங்கீதா விஷயத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, 'அதெல்லாம் அவ்வளவு ஒர்த் இல்லை' என கேஷுவலாக கூறினார். தன்னுடன் 20 வருடங்களுக்கு வாழ்ந்தவரும், அவர் இப்போது செய்துகொண்டிருப்பதும் ஒர்த் இல்லை என்று சொல்ல விஜய்க்கு எப்படி மனது வந்ததோ என்றும் கேள்விகள் எழுந்தன.
தேர்தலில் எதிரொலிக்குமா?: இது ஒருபக்கம் இருக்க விவாகரத்து மனு மட்டுமின்றி இன்னொரு மனுவையும் தாக்கல் செய்தார் சங்கீதா. அதில், 'நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அவர் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். என்னது வீட்டுக்குளேயே விடவில்லையா என்று இந்த விஷயத்திலும் விஜய்க்கு எதிராகவே மக்களின் குரல் இருந்தது. ஆகமொத்தம் இந்த விஷயம் விஜய் இத்தனை வருடங்கள் காப்பாற்றியிருந்த இமேஜை அடித்து நொறுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற அச்சமும் தவெக தொண்டர்களிடையே இருக்கிறது.
ஜோசியர் முன்னிலையில் பஞ்சாயத்து: இது ஒருபக்கம் இருக்க சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கும், சங்கீதாவுக்கும் நெருக்கமான ஜோசியர் ஒருவர் சென்னை வந்து இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து செய்ததாகவும்; அப்போது விவாகரத்து கொடுக்க விஜய் முடிவு செய்துவிட்டார். 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தர முடியாது; வேண்டுமென்றால் 25 கோடி ரூபாய் தருகிறேன் என விஜய் சொன்னதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை வரவிருக்கிறது.
ஆஜராவாரா விஜய்?: இன்றைய விசாரணையில் ஆஜராவாரா? அப்படி ஆஜராகும் பட்சத்தில் சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுத்துவிடுவாரா என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கிறது. மேலும் தேர்தல் பரப்புரை இருப்பதால்; தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே வீடியோ காலில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம். ஆகமொத்தம் இத்தனை வருட விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை முடிவுக்கு வருமா இல்லையா என்பது கிட்டத்தட்ட இன்று தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
