நடிகையுடன் தொடர்பு.. மகன் கேட்ட கேள்வி.. உருவான தள்ளு முள்ளு.. விஜய் பற்றி பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: விஜய் மீது சங்கீதா வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றித்தான் சோஷியல் மீடியா முழுவதும் பேச்சாக இருக்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கு விசாரணை நடக்கவிருக்கிறது. விஜய் விவாகரத்து கொடுப்பாரா இல்லையா என்பது குறித்து தெரிந்துகொள்ளத்தான் அனைவரும் ஆவலாக உள்ளனர். இதுவரையிலுமே அவர் எதுவும் பேசாமல் அமைதிதான் காத்துவருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

விஜய் - சங்கீதா விவகாரம் பற்றி அறம்நாடு என்ற யூடியூப் சேனலுக்கு பேசிய பாலாஜி பிரபு, "விஜய் நிறைய அட்டகாசம் செய்திருகிறார். ஆறு வருடங்களாக சங்கீதா அந்த வீட்டில் ஒரு அடிமை போல்தான் இருக்கிறார். அந்த வீட்டில் கீழே விஜய், மேல் ஃப்ளோரில் சங்கீதா இருக்கிறார்கள். இரண்டு பேரும் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் இப்போது இருக்கும் மேனேஜர் மூலம்தான் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வார்கள். இதிலிருந்தே அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

Vijay Sangeetha Divorce Row Producer Balaji Prabhu Shares New Claims in Interview
Photo Credit:

28 வருடங்கள் வாழ்க்கை: அவர்கள் கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஒரே வீட்டில் தனித்தனியாக சமைத்து சாப்பிடுகிறார்கள். சங்கீதா வெளியே போக கார் கொடுப்பதில்லை; இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். சங்கீதா குறிப்பிட்டிருக்கும் நடிகையால் குடும்பத்துக்குள் ஏகப்பட்ட முறை சண்டைகள் வந்திருக்கின்றன. அப்படி ஒரு சண்டையின்போது, ஏன் இப்படி செய்கிறீர்கள் என மகன் கேட்க; மகனுக்கும் விஜய்க்கும் இடையேகூட தள்ளுமுள்ளு வந்துவிட்டது.

வீட்டிலிருந்து வெளியே வந்த மகன்: உடனே ஜேசனிடம் விஜய் இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்கக்கூடாது என விஜய் சொன்னார். அதற்கு ஜேசனோ நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருங்கள் என சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார். அவர் இப்போது தனியாக இருக்கிறார். மகள் லண்டனில் படிக்கிறார். மனைவியும், கணவனும் ஒரே வீட்டில் பிரிந்திருக்கிறார்கள். பாருங்கள் ஒரு நடிகைக்காக குடும்பத்தையே உடைத்துவிட்டார். விஜய்யை பற்றி மக்களிடம் சொல்ல வேண்டுமென்றுதான் இந்த வழக்கையே சங்கீதா தொடுத்திருக்கிறார். முகத்திரையை கிழிப்பதுதான் அவரது திட்டம்.

Also Read
சங்கீதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விஜய்யின் தாய், தந்தை?.. என்ன முடிவெடுப்பார்.. பிரபலம் ஓபன்
சங்கீதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விஜய்யின் தாய், தந்தை?.. என்ன முடிவெடுப்பார்.. பிரபலம் ஓபன்

யாராவது செய்வார்களா?: உதவியாளரை எட்டி உதைத்திருக்கிறார் விஜய். பொதுவாக பணக்காரர்கள் எல்லாம் தங்களிடம் வேலை பார்ப்பவர்களை நல்லபடியாக சொகுசாக வைத்துக்கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் மூலம் தங்களது ரகசியங்கள் வெளியே கசிந்துவிடக்கூடாது என நினைப்பார்கள். ஆனால் விஜய்யெல்லாம் அப்படி நினைப்பதே இல்லை. அவரது முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார்கூட, 'விஜய்யின் பல தவறுகளுக்கு உடந்தையாக இருந்துவிட்டேன். அந்தப் பாவங்களுக்கு பரிகாரம் தேடுகிறேன்' என சொல்கிறார். அவரெல்லாம் வாயை திறந்தால் பல விஷயங்கள் வெளியே வரும். ஏனெனில் சங்கீதா 99லிருந்து விஜய்யுடன் இருக்கிறார். செல்வக்குமாரோ 92லிருந்தே இருக்கிறார்.

சங்கீதா பேட்டி கொடுத்துவிட்டார்: சங்கீதா இதோடு விடுவதாக இல்லை. இன்னும் பல விஷயங்களை வெளியே சொல்லப்போகிறார். ஒரு பிரபலமான சேனலுக்கு பேட்டியெல்லாம் கொடுத்து முடித்துவிட்டார். ஆனால் விஜய் தரப்போ அந்தப் பேட்டியை வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். அந்தப் பேட்டியை ஒளிபரப்ப வேண்டாம் என்று சொல்லுங்கள்; என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்பதுதான் அவர்களது கருத்து. அதேபோல் விஜய் அவரது சொத்தை யாருக்கும் விற்கக்கூடாது அல்லது பினாமி பெயரில் மாற்றக்கூடாது என்பதற்காக விரைவில் ஸ்டே ஆர்டரும் வாங்கப்போகிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X