விஜய் - சங்கீதா திருமணம் முடிந்ததுமே அவர்களை வெளியேற்றினேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் உடைச்சிட்டாரு
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா தாக்கல் செய்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் வீடியோ கான்ஃப்ரென்ஸில் ஆஜராக அனுமதியும் விஜய் தரப்பிலிருந்து கோரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விஜய்யை திருமணம் செய்துகொண்ட சங்கீதா அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மாதத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில் விஜய்யின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதை பார்த்து நம்புவதா வேண்டாமா என்று உச்சக்கட்டமாக குழம்பினார்கள் ரசிகர்களும், தொண்டர்களும். போதாக்குறைக்கு திரிஷாவுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு வந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

உடைந்த இமேஜ்: சங்கீதா அவர் மீது வைத்த குற்றச்சாட்டும், திரிஷாவுடன் அவர் ஜோடியாக வந்ததும் உள்ளபடியே விஜய்யின் இமேஜை கொஞ்சம் டேமேஜ் ஆக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கட்டிய மனைவியையே ஒழுங்காக பார்த்துக்கொள்ளாத அவர் தமிழ்நாட்டு மக்களை எப்படி பார்த்துக்கொள்வார் என்றும் கேள்விகளை முன்வைத்துவருகிறார்கள். இதன் காரணமாக தேர்தலில் அவருக்கு எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும் இருக்கிறார்கள் தவெகவினர்.
விசாரணைக்கு வந்த மனு: இதற்கிடையே ஒரு ஜோசியர் மூலம் பஞ்சாயத்து நடந்ததாகவும் அதில் ஜீவனாம்சம் கொடுத்து சங்கீதாவிடமிருந்து பிரிவதற்கு விஜய் ஒத்துக்கொண்டார் என்றும் சில நாட்களாக தகவல்கள் பரவின. இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று நீதிமன்றத்தில் விஜய் - சங்கீதா விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் இரண்டு பேருமே காணொலி மூலம் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அன்றைய நாள் இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சட்டப்பூர்வமாக முடிவுக்கு வரும் எனவும் தெரிகிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி: இது ஒருபக்கம் இருக்க விரைவில் விஜய் ஒரு பேட்டி கொடுப்பார் என்று சில வாரங்களாகவே பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். விஜய்க்கு பதிலாகத்தான் சந்திரசேகர் பேட்டி கொடுத்திருக்கிறார்; எனவே அவர் பேசுவது கண்டிப்பாக விஜய்யின் வாய்ஸ்தான். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியில் விஜய் - சங்கீதா குறித்து பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன சொன்னார்?: அந்தப் பேட்டியில் அவர், "விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்தவுடனேயே அவர்களை தனி குடுத்தனம் வைத்துவிட்டேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். மகளை கடவுள் கேட்டதால் கொடுத்துவிட்டோம். அதற்கு பிறகு எனக்கு ஒரே பிள்ளைதான். நினைத்திருந்தால் அவரை எங்களுடனேயே வைத்திருப்பேன். ஆனால் நான் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினேன். ஏனென்றால் அவருக்கென்று தனித்துவமும், சுதந்திரமும் வேண்டும். நான் தனியாக வைத்ததால் நாம் ஜெயிக்கணும் என்று வருகிறார். அப்படி பிள்ளைகள் வரும்போது அதை பெற்றோர்கள் அழகு பார்க்க வேண்டும். எனது மகன் தனியாக இருக்கிறான் என்கிற கவலை ரேகை எனக்கு இருந்திருக்கிறதா?" என கேள்வி எழுப்பி முடித்தார்.


Click it and Unblock the Notifications
