»   »  அஜீத் மாதிரியே சொல்பேச்சு கேட்காத விஜய்: பயந்து போன விஜய் 61 படக்குழு

அஜீத் மாதிரியே சொல்பேச்சு கேட்காத விஜய்: பயந்து போன விஜய் 61 படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படத்தில் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு ஆபத்தான சண்டை காட்சியில் நடித்துள்ளார் விஜய்.

பைரவா படத்தை அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தற்காலிகமாக விஜய் 61 என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள்.

Vijay says NO to dupe, YES to risk

படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஸ்டிடுயோ ஒன்றில் போடப்பட்ட செட்டில் ஆபத்தான சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

அந்த காட்சியில் ரிஸ்க் அதிகம் என்று தெரிந்தும் டூப் போட மாட்டேன் என்று அடம் பிடித்து நடித்துள்ளார் விஜய். மேலும் பாதுகாப்பு கவசங்களும் அணியாமல் நடித்துள்ளார்.

அவர் தைரியமாக நடித்தாலும் அந்த காட்சியை படமாக்கி முடிக்கும் வரை படக்குழு தான் பயத்தில் இருந்துள்ளது. விஜய் ஆபத்தான காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளது இது முதல் முறை அல்ல.

English summary
Vijay has apparently acted in a risky stunt scene refusing to have a dupe for his upcoming movie Vijay 60 being directed by Atleee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil