விஜய்யின் ஆன்மிக அரசியல்.. சீரடி சாய் பாபா கோயிலில் நீல சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த தவெக தலைவர்!
சீரடி: திருச்செந்தூரில் முருகக் கடவுளை சாமி தரிசனம் செய்த தவெக தலைவர் விஜய் அடுத்ததாக இன்று சீரடிக்கு சென்று சாய் பாபாவை தரிசனம் செய்துள்ளார். சென்னையில் சாய் பாபாவுக்கு மிகப்பெரிய கோயிலை விஜய்யின் அம்மா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தனது நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து தனி விமானத்தில் இன்று சீரடிக்கு சென்று சாய் பாபாவை வணங்கியுள்ளார்.

சீரடி சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு சாய் பாபாவை விஜய் வணங்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஆன்மிக அரசியல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால், அரசியலுக்கு உடல் நலக்குறைவு காரணமாக வரமுடியவில்லை. விஜய் என பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவரை பாஜகவை சேர்ந்த எச். ராஜா ஜோசப் விஜய் என அடையாளப்படுத்த, ஆம் நான் ஜோசப் விஜய் தான் என வெளிப்படையாக பேச ஆரம்பித்த விஜய் தற்போது அரசியல் களத்திற்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரையும் கவரும் விதமாக புதிய ஆன்மிக அரசியலை கையில் எடுத்துள்ளாரா? என கேள்விகள் கிளம்பியுள்ளன.

சீரடியில் விஜய்: சீரடி சாய் பாபா கோயிலில் நீல நிற சட்டை அணிந்துக் கொண்டு நடிகரும் தவெக தலைவருமான விஜய் சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. வேட்டி, சட்டை அணிந்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பாக திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகின. இந்நிலையில், அடுத்ததாக விஜய் எந்த கோயிலுக்குச் செல்வார் என்றும் அனைத்து மதத்தினரையும் கவரும் வகையில் அவர் சர்ச் மற்றும் தர்காவுக்கு செல்லக்கூடும் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
எக்ஸிட் போல் முடிவுகள் மற்றும் ரிசல்ட்: இன்று மாலை வெளியாகவுள்ள எக்ஸ்டி போல் முடிவுகள் விஜய்யின் தவெகவுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது எதிராக இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும். மே 4ம் தேதி வரை விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கப் போகிறது. எம்.எல்.ஏவாக வெல்வாரா? முதல்வராக மாறுவாரா? என ஏகப்பட்ட கருத்துக் கணிப்புகளும், விவாதங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்த அசைக்க முடியாத சக்தியாக விஜய் மாறியுள்ளார் என்பது மட்டும் நிதர்சனம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications