நேற்று ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ்.. இன்று விஜயகாந்த் மகன்.. விஜய்யின் தொடர் வாழ்த்து மழை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையின் அடையாளமாக அரை கிலோ சின்ன சைஸ் கேக் வாங்கி ரஜினிகாந்த் கட் செய்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அண்ணாத்த படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். நயன்தாராவின் திருமணத்துக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் கூலி படத்தில் பிசியாக உள்ள நிலையில், கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு செல்லவில்லை.

vijay vijaya prabhakaran rajinikanth

நடிகர் விஜய், மாளவிகா மோகனன், த்ரிஷா உள்ளிட்ட பலர் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைந்தவுடனே: நடிகர் விஜய் சிறு வயதில் இருந்தே ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களை பார்த்து தான் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை நச்சரித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நடித்து தனக்கான ஒரு அங்கீகாரத்தையும் இடத்தையும் தமிழ் சினிமாவில் பெற்ற விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் பெற்று உச்ச நட்சத்திரமாக மாறிய நிலையில், மக்களுக்கு சேவை செய்யப் போவதாக சொல்லிவிட்டு தவெக கட்சியை ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ளார். விஜயகாந்த் மறைவு செய்தி கேட்ட உடனே அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் வீட்டுக்கும் சென்று பிரேமலதா மற்றும் அவரது மகன்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோட் படத்தில் விஜயகாந்த்: இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக கோட் திரைப்படம் மாறியிருக்கிறது. அந்த படத்தில் விஜய்யின் அறிமுகத்துக்கு முன்னதாக ரசிகர்களுக்கு விஜயகாந்தின் அறிமுகத்தை அசத்தலாக வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். கோட் படத்தில் ஏஐ மூலமாக விஜயகாந்தை உருவாக்க பிரேமலதா விஜயகாந்த் அனுமதி அளித்திருந்தார்.

விஜய பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் களம் கண்டு வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்ததாக தேமுதிக சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முதலே நடிகர் விஜய் ஃபுல் வாழ்த்து மோடுக்கு மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X