96 படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை: விஜய் சேதுபதிக்கு ஏன் இப்படி நடக்கிறது?
சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ஆன்லைனில் கசிந்துவிட்டது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷா நடிப்பை பலரும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
பட ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டபோதிலும் ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இணையதளம்
கேடிஎம் பிரச்சனையால் 96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. ஒரு வழியாக படம் அறிவித்த அன்றே ரிலீஸானது. இந்நிலையில் படம் இணையதளங்களில் கசிந்து படக்குழுவினருக்கு தலைவலியாக மாறியுள்ளது. சில இணையதளங்களில் தரமான பிரிண்ட்டில் வேறு வெளியிடப்பட்டுள்ளது.

கவலை
ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது என்று படக்குழு நிம்மதி அடைந்த நேரத்தில் தற்போது இணையதளங்களில் படம் கசிந்து மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள்
வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட ஆன்லையில் டவுன்லோடு செய்து பார்க்க நினைப்பார்கள். இதனால் படத்தின் வசூல் தான் பாதிக்கப்படும். திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவதை அவர்களை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள் டவுன்லோடு செய்து பார்ப்பதை நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறார்கள் மக்கள்.

நடவடிக்கை
ரிலீஸ் பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் பெயர் அடிபட்டது. ஆனால் விஷால் நல்லவர், அவர் செய்தது சரி என்று அவருக்கு பரிந்து பேசினார் விஜய் சேதுபதி. திருட்டுத்தனமாக படத்தை ஆன்லைனில் வெளியிடுவோரை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்ற விஷாலின் சவால் காலாவதியாகிவிட்டதா?.


Click it and Unblock the Notifications











