’நல்ல வேளையாக வடசென்னை படத்தில் நான் நடிக்கவில்லை’: விஜய் சேதுபதி ஓபன் டாக்
Recommended Video

சென்னை: வட சென்னை படத்தில் நடிக்காதது நல்லது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வட சென்னை. தற்போது ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் அமீர் நடித்துள்ள ராஜன் கதாபாத்திரம் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் விஜய் சேதுபதி தான். பிறகு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகினார்.

சமீபத்தில் ரஞ்சித் துவங்கியுள்ள கூகை நூலகத்தில் 96 திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. அப்போது 96 படத்தைப் பற்றி, வசந்தபாலன், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர்கள் தமிழ்ப்பிரபா, வாசுகி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த நடிகர் விஜய் சேதுபதி, வட சென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அமீர் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல வேளையாக அப்படத்தில் நான் நடிக்கவில்லை எனக் கூறினார். தொடர்ச்சியாக தன்னுடைய படங்கள் ரிலீஸாவது தொடர்பான மீம்ஸ்களை பார்க்க முடிகிறது என்றும், இப்படத்தில் நடித்திருந்தால், தொடர்ச்சியாக மூன்று படங்கள் ரிலீஸாகியிருக்கும் என நகைச்சுவையாக தெரிவித்தார்.
செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் 96 படத்தில் சில காட்சிகளில் அவர் ஒன்றிப்போகாமல் இருந்ததாகவும், அதை அவரே உணர்ந்ததாகவும், ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் என்பதற்காக அப்படி இல்லை என சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications










