ரஜினி நடிக்கவிருந்த படத்தில் விஜய் சேதுபதி: மாஸு தான்...
சென்னை: ரஜினி நடிக்கவிருந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காக்கா முட்டை படம் புகழ் மணிகண்டன் அடுத்ததாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்குகிறார். 70 வயது விவசாயியை சுற்றி நகரும் கதை. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படத்தை எடுக்கிறார் மணிகண்டன்.
இந்நிலையில் படத்தின் ஹீரோ யார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

விஜய் சேதுபதி
கடைசி விவசாயி படத்தில் ரஜினியை நடிக்குமாறு கேட்டுள்ளார் மணிகண்டன். ஆனால் பல்வேறு காரணங்களால் ரஜினியால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ரஜினிக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

காமெடி
விவசாயத்தை பற்றிய சீரியஸான படம் என்றாலும் அதில் காமெடியும் கலந்து மக்கள் ரசிக்கும்படி படத்தை எடுக்கிறாராம் மணிகண்டன். தமிழக விவசாயிகளின் நிலையை தெரிவிக்கும் வகையில் இந்த படம் உருவாகிறது.

பிசி
கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய் சேதுதபதி. இந்நிலையில் ரஜினி நடிக்கவிருந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு
ஜுங்கா, மாமனிதன் ஆகிய படங்களை முடித்த பிறகு கடைசி விவசாயி படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டவன் கட்டளை படத்தை அடுத்து மணிகண்டன், விஜய் சேதுபதி மீண்டும் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











