வில்லேஜ் மசாலாவுக்கு ரெடியாகிவிட்டார் விஜய் சேதுபதி... பொன் ராம் இயக்கத்தில் மே மாதம் ஷூட்டிங்
சென்னை: எம்.ஜி.ஆர் மகன் படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பொன்ராம்
சிவகார்த்திகேயன், ஶ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன், சிவகார்த்திகேயன், சமந்தா நடித்த சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம்.
இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், மிருணாளினி ரவி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி
இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பொன்ராம். இந்தப் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குவதாக இருந்தது.

மே மாதம் ஷூட்டிங்
விஜய் சேதுபதி மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், மே மாதம் தொடங்க இருக்கிறது. படம்பற்றி பொன்ராம் கூறும்போது, திண்டுக்கல் பின்னணியில் நடக்கும் வில்லேஜ் மசாலா கதை. சிவகார்த்திகேயன் நடிப்பில் நான் இயக்கிய முந்தைய படங்களை போல இது இருக்காது.

வித்தியாசமான கதை
காமெடி, காதல், ஆக்ஷன் பார்முலா கதைதான். இருந்தாலும் வித்தியாசமாக இருக்கும். இந்த கதை விஜய் சேதுபதிக்காக செய்யப்பட்டது போல இருக்கும்.

முன்னணி நிறுவனம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. படத் தயாரிப்பு சம்பந்தமாக முன்னணி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











