சூர்யா, தனுஷை முந்திய விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.. இதுதான் 2024ன் பெரிய சம்பவம்.. சிம்பு எங்கே?
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இந்த வயதிலும் சினிமாவை மூச்சாக நினைத்து நடித்துக் கொண்டே ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர். மற்ற மொழிகளில் உள்ள மூத்த நடிகர்கள் இப்படி பாக்ஸ் ஆபிஸில் இந்த வயதில் எல்லாம் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகத்தான் இருக்கும்.
நடிகர் விஜய் தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு குட் பை சொல்லப் போகிறார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடித்து வந்தாலும், அதைவிட தனது பேஷனான கார் ரேஸிங்கிற்கும் உலக பைக் டூருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து டிராக்கை மாற்றிக் கொண்டார்.

அடுத்த செட் நடிகர்களாக இருக்கும் சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடையே தான் கடுமையான பாக்ஸ் ஆபிஸ் மோதல்களும் நல்ல படத்தை யார் கொடுப்பது என்கிற ஆரோக்கியமான போட்டியும் நிலவுகிறது. இந்த ஆண்டு அப்படி மூத்த நடிகர்களை ஓரங்கட்டிவிட்டு விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் செய்த தரமான பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சரிந்த சூர்யாவின் சாம்ராஜ்யம்: விஜய், அஜித்துக்குப் போட்டியாக அயன், சிங்கம் என பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களை கொடுத்து ஒரு காலத்தில் கெத்துக் காட்டிய சூர்யா கடந்த 11 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக ஹிட் கொடுக்காமல் தவித்து வருகிறார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சூர்யாவுக்கு ஒரு சோலோ ஹிட் கூட கிடைக்கவில்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த ஆண்டு 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் அதிகபட்சமாக உலகளவில் 110 கோடி தான் வசூல் செய்ததாகவும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த படமாகவும் மாறிவிட்டது.

தேறி வரும் தனுஷ்: கேப்டன் மில்லர் மற்றும் ராயன் என 2 படங்களிலும் தனுஷ் தனது மொத்த உழைப்பையும் கொட்டி நடித்து மிரட்டியிருந்தார். கேப்டன் மில்லர் படத்தின் கதையில் ஏற்பட்ட சில குழப்பத்தால் அந்த படம் பெரிதாக ஓடவில்லை. தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் அந்த படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

தனுஷை முந்திய விஜய் சேதுபதி: இந்த ஆண்டு தமிழில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா படம் 100 கோடி வசூல ஈட்டியது. சமீபத்தில், சீனாவில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான அந்த படம் அங்கேயும் ரசிகர்களை அழ வைத்து ஆட்சி செய்து வருகிறது. சீனாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை மகாராஜா படம் ஈட்டிய நிலையில், 150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி தனுஷின் ராயன் படத்தின் வசூலை முந்தியுள்ளதாக கூறுகின்றனர். 200 கோடி வரை மகாராஜா படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தை முந்திய சிவகார்த்திகேயன்: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதியை மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனையே இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் முந்தியுள்ளார். நடிகர் விஜய்யின் கோட் படத்துக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படமாக அமரன் மாறியது. 300 கோடி வசூலை அமரன் கடந்து மாஸ் காட்டிய நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு ஸ்ட்ராங்கான இடத்தை சிவகார்த்திகேயன் அமைத்துக் கொண்டதை உறுதி செய்துள்ளார்.

சிம்பு எங்கே?: இந்த ஆண்டு சிம்பு நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படம் வெளியாக உள்ளது. அஜித்தின் படங்களும் இந்த ஆண்டு வெளியாகவில்லை. ஆனால், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் பொங்கலுக்கு யார் முதலில் வருவது என்கிற போட்டியில் இருப்பதாக கூறுகின்றனர். சிம்புவின் சோலோ ரிலீஸ் படத்துக்காக ரசிகர்கள் இன்னும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.



Click it and Unblock the Notifications











