அஞ்சலியுடன் தாய்லாந்துக்கு பறந்த விஜய் சேதுபதி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் படு பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். படம் பார்க்க காசு இல்ல அட்லீஸ்ட் ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் நடிங்க என்று ரசிகர்கள் கெஞ்சுமளவுக்கு நடித்து தள்ளுகிறார்.

இப்போது பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அப்படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதியும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலியும் தாய்லாந்து சென்றுள்ளனர். நாற்பது நாட்களுக்கு தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ப்ரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. இப்படத்திற்கு பிறகு சீனுராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. அந்த படத்தையும் ஒய்.எஸ்.ஆர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











